பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

சொற்களா இவைகள்? சுளைகளின் சாரி. கருத்து, வில்லின் சிறுத்தைக் கணைகள்; கவிதைக ளாஇவை? கணிச்சாற் றருவி.

நூல்களா அவைகள்? நூல்இழை யாகி (8.5) நெஞ்ச ஊசியில் கொஞ்சுகா தலிகள்: புத்தகம் என்பதோ? புகுந்த அகத்தில் சித்திரை நிலவின் முத்தமுத் திரைகள்.

அவர்தமிழ் அடடா! அழகின் சிரிப்பு'; இருண்ட வீட்டின் குடும்ப விளக்கு'; (90) காதலில் எதிர்பா ராத முத்தம்'; பைந்தமிழ் பெற்ற 'பாண்டியன் பரிசு'; 'இசையமு தளிக்கும் இசைத்தே னருவி';

தமிழரை ஏற்றும் தமிழியக் கத்தேர்'; அறிவுக் கடல்சூழ் குறிஞ்சித் திட்டு'; (95) ஆற்றல் மறவரின் ஏற்றப் பாட்டு’ நறும்பூஞ் சோலையின் கருங்'குயில் பாட்டு'; ஏதம் போக்கும் காதல் நினைவுகள்'; - (98)

350