பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இலங்கையில் இன்று இந்தியப் படையின் செயலைக் கண்டுவரும் கவிஞர் அப் பாராட்டை ஏற்பாரா? அவர் உணர்வை நான் அறிவேன். வேறு பாடல் LT-ಶ கொண்டிருப்பார். -

குறைகள் சில

கவிதைத் திறனாய்வு எனும் முறையில் என் கண்ணில் பட்ட குறைகளையும் குறித்தாக வேண்டும்.

அருஞ்சொற்கள் பல பயின்று வருகின்றன. நேடி னான், நேடிடுக, பணைத்து, கன்னாத, தெய்ப்பில்லா, தெற்றியில், முற்கியும், செயிற்றி, வெயிற்றி, துயிற்றி முதலிய சொற்கள் பெரும்புலமை பெற்றவர்க்கேயன்றி மற்றவர்க்குப் புலனாக மாட்டா. இந்நிலையில் கவிதையோட்டம் தடைப்பட்டு விடுகிறது என்பது குறையே. எளிய பதங்களை நாடிய பாரதி, எளிய நடையில் தமிழ்நூல் எழுத நினைத்த பாரதிதாசனைக் கவிஞர் உணராதவர் அல்லர்.

பாரதிதாசனைப் பற்றிய பாடலில் தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று வருகின்றது. இது ஒரு திரைப்படத்தில் நேர்ந்த தவறு. 'தமிழுக்கு அமு தென்று பேர்" என்றுதான் இருக்கவேண்டும். கவிஞர் கோ பழைய பதிப்பை நோக்கினால் தெரியும்.

குமுகாயச் சீர்திருத்தம்

கவிஞர் குமுகாயச் சீர்திருத்தச் சிந்தனை உடையவர்.

மக்கள் தன்மானத்தை இழக்க இசையாதவர்களாகவும்,

[37]