பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

பகுத்தறிவு நோக்கினராகவும், இனமான உணர்வுடைய வர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

இன்றைய நிலை என்ன என்பதையும் இவர் மறக்க வில்லை.

"ஊட்டுமுடைத் தமிழ்ப்பண்பே ஊனமுற்று

. . நாடோறும் வாட்டமுறல் காண்கின்றோம்' (118) - என்றும்

இன்னும் பலவகையிலும் தமிழர் உற்றுள்ள தலைக்குனிவு, களைப் படம்பிடிக்கிறார்.

பகுத்தறிவின் சிறப்பினை மிக அருமையாக எடுத்துச் சொல்கிறார் குமுகாயச் சீர்திருத்தக் கருத்துகளை வாரி வழங்குகிறார்.

"ஆள்பிடித்துக் கால்பிடித்தே அண்டங்காக்கை பிடித்தே அடம்பிடித்து வால்பிடித்து வளம்பிடிக்க வலைபிடிப்பார் பல்லோராய் வளர்தல்

- கண்டேம்' (214) -என்று வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார்.

‘'எதுவரையில் இவை செலுமோ? என்னமுடி வைத்தருமோ, எல்லை

காணேம்' (231)

-என்று தம் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

"நல்லவர்கள் நெஞ்சுவக்க நாட்ாளக் கானும் நாள் நல்ல நாளாம் (239)

[38].