பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

1959 நாகைத் தமிழ்ச் சங்கத்தில் இலவய மாணவர்

இல்லம் தோற்றுவித்தமை நாகை வட்டம், மஞ்சட்கொல்லை குமரன் கல்வி நிலைய ஆசிரியர்க்கு 10 ஞாயிறுகளில் தமிழ்க் கற்பிப் புப் பயிற்சி. 1963 நாகையில் தமிழ்க் கல்லூரி தோன்ற முழு உதவி 19-6-1969 நாகையில் மறைமலையடிகளார் முழு உருவ வெண்கலச் சிலை நாட்டல்-பொதுச்செயலாளர். 1972-73 பூம்புகார்ச் சிலப்பதிகாரக் கலைக்கூடச் சிற்ப மேற்பார்வை-முகப்பு எழுநிலைமாடக் கருத்தேற்றம். 23-9-73 நாகை வீடு வாய்ப்பற்றோர் சங்கம் நிறுவல்; அதன் தலைவர் - புது நகர் அமைப்பு மனைகள்; 1979-81 தென்பகுதிப் புகைவண்டித்துறை நாகைப் புகைவண்டி நிலையக் கலந்தறியும் குழு உறுப்பினர். 19-12-76 நாகை மறைமலையடிகளார் சிலை மைய மாக மறைமலையடிகளார் பூங்கா அரங்கம் அமைப்பு 8-9-79 நாகைப் புகைவண்டி நிலையத்தில் மறைமலை யடிகளார் பிறப்பிடம் அறிவிப்புப் பாளம் திறப்பு. 1979-84 தமிழகப் புலவர் குழுச் செயலாளர். 9-1-1980 மதுரை - ஐந்தாவது உலகத் தமிழ் பொது

மாநாட்டுப் புலவர் குழு அமர்வு இயக்கல். 1986 தஞ்சாவூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர். 25-8-87 689-ஆவது திருமணத் தலைமை

திறன் - புகழ்

10-1-1946 நல்ல குத்தகை (தலைப்பு) முதல் கவிதை

வெளியீடு - சனசக்தி', சென்னை புனைபெயர் கோவை. இளஞ்சேரன் வழங்கத் தொடங்கியமை

369