பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கண்ணிமைப்பே காதலிசைத் தாளம்

கருங்கூந்தல் கனவில்வலை Gur®ಹಿ; புன்னகையோ புகுந்துடலைப் புதுக்கும்:

பொன்னுடலம் உள்ளமதில் மிதக்கும்; பொன்னகைகள் உடல்மெருகில் தாவும்:

பொறுக்காத இடைஎனையே கூவும் துண்ணுணர்வாய்ச் சுண்டிவிட்டு, நாடித்

துடிப்போட்டர் தனில்,அவளே துடிப்பாள்.

அவள்மூச்சில் அன்பிழைந்தே உலவும்;

அவள் பேச்சில் இசைத்தமிழே அவிழும்; அவள்பார்வை இன்பப்புல் லரிப்பாம்;

அவள் ஆர்வம் இனியஅர வணைப்பாம்; அவள் இயக்கம் என்னுயிரை இயக்கும்; .

அவள்முயக்கம் உவமையற்று மயக்கும்; அவள் என்றே ஏன்பிரிக்க வேண்டும்?

அன்போட்டந் தனில்,யனே ஆனாள். é

(அறுசீர்

ஆசிரிய விருத்தங்கள்)