பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

அவள் உணர்வில் அவன்

பகுத்தறிவில் பண்பமைய, உணர்வுப்

பரிவதனைக் காதல்"எனப் பகர்ந்தால் மிகுத்துரைத்த தாகாது; மிளிரும்

. மிடுக்குடையார் என்னுயிரில் பள்ளி வகுப்பமைத்து முதற்பாடம் வகுத்து

வழிநடத்தி மணவறைசேர்த் தென்னை அகத்துறைக்கோர் காப்பியமாய்ப் படைத்தென்

. அன்பற்றத் தனில்,அவரே ೨೦fಖTಗೆ.

ஆண்மையிலே கொற்றவனின் கூர்வேல்;

அஃதெனக்கோ குற்றால நீர்வாள்; கேண்மையிலே சுட்டாலும் சங்கு;

கேள்ளனக்கோ முற்றாத நுங்கு; பான்மையிலே சொற்றவறாத் தமிழர்;

பாரில்எனைப் பற்றவந்த தலைவர்: மேன்மையிலே தனிச்செம்மல்; காதல்

மெருகோட்டத் தனில்,அவரே மிளிர்வார்.