பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

முறையோ சொல்லாய்!

தித்திக்கும் சுவைத்தேனை உதட்டில் ஊற்றித் தென்றலினை உடல்முழுதும் தேங்க விட்டுக் குத்தகையாய் இன்பமதைக் குவிக்கும் என்றன் குன்றன்னார், தோள்களையான் காணும் முன்னர் "அத்தான் என் றோடிப்போய் அணைத்துக் கொள்ள அமைத்திருந்த ஆர்வமதை அவர்க்கு முன்னே சொத்தையாய்ச் சிதைத்தனையே நாண மே,நீ சுவைக்கூட்டை உடைத்தெறிதல் முறையோ சொல்லாய் 20 பொங்கிவரும் புதுவெள்ளப் பேற்றைத் தாவிப் புகுந்தனையுங் கெண்டைஎன அவரைக் கிட்டித் தங்கஉடற் புறத்தையொரு கைய 6TIT 6/,

தளிர்முகவாய் தொட்டொருகை அசைக்க, முன்நாள்

திங்களின் முன் நான் நினைத்த எண்ணம் எல்லாம் திறந்துசொல எனைவிடுத்து நாண மே,நீ

எங்கேனும் துளிநேரம் ஒதுங்கல் இன்றி எதிர்ப்பியக்கம் நடத்துவதும் முறையோ சொல்லாய்!

21

15