பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

8. கசக்கும் காலை

மரங்களுக்கு வேர்போலுந் தொழிலாளர் மன்பதைக்கே உழைத்து ழைத்தும்

உரங்காணார், உழன்றிடுவார்; அவர்க்கெல்லாம்

உறக்கந்தர்ன் ஒய்வு நேரம்; -- உறங்கவரும் இரவவர்க்குத் தேன்கூடாம்; அவர்சயாம்; அதைக்க லைக்கக் குரங்கெனவே வருங்காலை கனியெனினும்

குமட்டல்தருங் கசப்பே யன்றோ ?

3|

சீர்திருத்தச் செம்மல்களும் சிந்தனைகொள்

சிற்பிகளும் உறங்கும் போதில் "ஊர்திருத்த விழிப்பீர்'என் றெழுப்புகின்ற

காலைப்போ துயர்வென் றாலும், பேர்நிறுத்தும் வஞ்சகத்தைப் பொதியவைத்துப்

படுத்திருப்போர் சுரண்ட லுக்கு வேர்நிறுத்த வருங்காலை விழாவெனினும்

வேம்புதருங் கசப்பே யன்றோ ?

32

22