பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தோழி:

வள்ளுவனார் சொல்லியதைக் கேட்டிருப்பாய்,

பெண்ணுளத்தைக் கிள்ளுவதேன் அன்னாய்! கிளறாதே!-வள்ளுவன்

சொல்

" "கண்ணுள்ளார் காத லவராகக் கண்னும்

எழுதேம் கரப் பாக் கறிந்து'

36

அன்னை:

ஒப்பனைக்கு மறுத்தாளென் கின்றாய்;

உண்ணாமல் உறங்காமல் கிடந்தால் அப்படியே உடல்வாடிப் போகும்;

அருமருகர் ஆர்வமொடு வருவார்;

இப்படியே இளைத்தவுடல் கண்டால்

ஏக்கமுடன் வாடிப்போய்த் தவிப்பார், தப்படியுன் தலைவிசெயல் போடி,

தாவிவந்து சோறுண்ணச் சொல்வாய்

37

25