பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

10. 'அமுதமொரு சுவையோ ?

புன்னைப்பூ முகம்வெளுக்கப் புதர்முல்லை சிரிக்கும்: புதுச்சுனையின் நீர்கறுக்கப் பொந்துத்தேன் நகைக்கும்; பின்னழகைப் பாரென்று மின்னல்மயில் ஆடும்; புன்னகைக்கும் மாளமிட்டுப் புறவினங்கள் கூடும்; தென்னையுச்சி ஒலையைத்தன் யாழிசையாய் மீட்டித் தென்றல்வளர் சோலையதில் தெரிவை மட்டும் இல்லை. கன்னியில்லாச் சோலையிலே தென்றலுமோர் குளிரோ? கன்னியவள் அணைத்திருந்தால் தென்றலுமோர் குளிரோ?

4

தவழ்ந்துவரும் வெள்ளத்தில் மிதந்துவரும் துரையின் தளிர்மென்மைப் பஞ்சனைகள்; தந்தக்காற் கட்டில்; அவிழ்ந்துவரும் முல்லைமணம் அசைந்துவருந் தென்றல் அருங்கலவைச் சந்தனத்தை அள்ளியள்ளி வீசும்; குவளைக்குள் தீம்பாலோ குடிப்பாயென் றழைக்கும்; குறைவில்லா அவ்வறையில் குமரிமட்டும் இல்லை, அவளில்லாப் பள்ளியறை சந்தனமோ கமழும் ? அவளிருந்தாற் சந்தனத்தின் மணச்சிறப்போ 3ಣಿಆ।

28