பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

11. இளமையெனும் பொல்லாய்

குறுமனலில் சுவரெடுத்துக் கூரை யின்றிக் குழந்தைவி டமைத்தேநான் ஆடும் போது, குறும்புபல செய்திடினும் என்றன் வாயில் குமிழெச்சில் தோய்ந்திட்ட வெல்லம் தின்றே 'அறுசுவையில் ஒன்றுகுறை வென்றே என்றன் அங்கையைச் சுவைத்ததையும் நிரப்பிக் கொண்ட நறுங்காதல் அத்தானின் பேரன் பெல்லாம் நத்தையோ டிாகியதே; நானென் செய்தேன் ? 45

பாவாடை மேலேயோர் ஆடை சுற்றிப்

போர்த்திட்ட மேலாடை விம்மிப் போக,

மூவாடை களைந்தேசிற் றாடை பூண்டு, முறுவலித்த எனைக்கண்டு எட்ட நின்று

தீவாடை உன்னுடல்மேல் தோய்ந்து பின்னர் தென்றலாய் மீளுவதேன்; புழுதிக் கூந்தல் பூவாடை வீசுவதேன்’ என்ற அத்தான்

பூரிப்பு மறைந்திடவே நானென் செய்தேன்?

46

30