பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கோவை, இளஞ்சேரன் கவிதைகள்

             அணிந்துரை

முனைவர் ச. அகத்தியலிங்கம்*

  --------------------------------
 தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை துணை இயக்குநர் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் எழுதிய கோவை. இளஞ்சேரன். கவிதைகள்' என்ற கவிதை நூலைப் படித்து மகிழ்ந்தேன். 
 நல்ல கவிதை உணர்வும், உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிகளும் பொங்கக் கவிதைகள் அமைந்திருப்பது எனக்குப் பெருமையைத் தருகிறது.
 இதுபோன்றே பாடுபொருள்களும் சிறந்த பொருள்களாக அமைந்துள்ளன. 'தமிழா கேள்!”, எவன் தமிழன்? கேட்ட தாய்', 'பண்பு அடையாளச் சின்னம் 'தைத்திங்கள்' முதலிய தலைப்பில் வரும் கவிதைகளில் காணப்படும் பாடுபொருள்கள் சிறந்து விளங்குகின்றன.
 பாரதியைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவர் கவிதைகள் நம் உள்ளத்தைத் தொடுவதற்குக் காரணம் அவர் கையாளும் உத்திகள் மட்டுமல்ல, அவற்றில் காணப்படும் உணர்வுகள் மட்டுமல்ல, பாடுபொருள்களும் நம் சிந்தனைக்கு உகந்தனவாப் இருக்கின்றன எனக் குறிப்பிடுவேன். 
  • துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்


                  [5]