பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

12. காதல் பேசிற்று.

தலைவி: -- " - --

தேடிவந்த எனதருமைச் செல்லத் தோழி! தேம்புகின்ற பெற்றோர்க்குச் சென்று ரைப்பாய்; 'ஓடிவிட்ட நும்பெண்ணாள் - ஆளன் தன்னோ - டோங்குகின்றாள் காதல்தரும் இன்பத் தென்றே.

தோழி: - * - நாடிதளர்ந் தழுகின்றார் உனைப்பி ரிந்தே நானென்ன நவில்வனடி அவர்க்கு மாற்றம்?

தலைவி ..

போடீ,போ; அவளிங்கு வந்தால் அன்னாள் பொன்நாடி புகைந்தேபோம் என்றே கூறாய்!

62 தோழி:

சிற்றிடையில் ஆடைசுற்றி மார்பில் கச்சுச் சீரமைத்தேன், எழில்தந்தாள்; மகிழ்ந்தேன்; அந்த 'ஒற்றைமகள் பிரிந்தனளே என்றே கூவி ஒப்பாரி வைப்பவட்கு நானென் சொல்வேன்?

தலைவி: • - - 'சிற்றிடையின் ஆடைதனில் கச்சில் போட்ட சுருக்கவிழ்க்க அத்தானைச் சூழ்ந்து சென்று, வெற்றிடையில் விளையாடி மகிழ்ந்தாள் என்று . விளம்பியவள் துயர்தீர்க்க விரைந்து போe 63

43