பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பாங்கி:

- கழறக் கேட்டுக் 'கண்டபடி தன்னுடம்பைக் காட்டு தற்குப் பச்சோந்தி உடலோடி அவற்கே என்று ‘படக் கென்றன் உடல்குலுங்க மடக்கிக் கேட்டாள்.

72

அவன்:

அங்கவுட ற் பளபளப்பால், கட்டுப் பல்லால், அணிகளினால் உடலெல்லாம் தங்க மென்று மங்கையிடம் சொல்லுதற்கு மறந்தாய் போலும்!

பாங்கி:

மயிரெல்லாம் வெள்ளியென்றும் சொன்னேன்; அன்னாள் 'தங்கத்தால் வெள்ளியினால் ஆன தென்றால் தக்கபடி அவ்வுடலில் பதிப்ப தற்குச் .ெ சங்குமுதக் கன்னிப்பெண் செல்லா தாகும்; *செங்கற்கள் கூடுமென்று செப்பாய்' என்றாள்.

73

  • செங்கற்கள் - மாணிக்கக் கற்கள்; கடுமண் கற்கள்.

49