பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 251
 

சார்ந்ததென்று கூறுவதற்கு ஆதாரமில்லை. சக்கிரவர்த்தியே கிறீஸ்தவராயினும் அவரது நீதியும் நெறியும் ஓர் மதத்தைச் சார்ந்ததன்று.

- 3:45: ஏப்ரல் 20, 1910 -


130. தேசம் சீர்கெடுவதற்கு மதமும் சாதியுமே காரணமோ

அநுபவத்தில் அறிந்துக்கொள்ள வேண்டியதேயாம். அதாவது ஓர் ஜவுளிக்கடை வியாபாரி சீட்டிகளைப் பரப்பிக்கொண்டு என் சரக்கே சரக்கு சீர்மெய்சரக்கு, என் சரக்கே சரக்கு சுதேசி சரக்கெனக் கூறி வியாபாரத்தை விருத்தி செய்துக்கொள்ளுவதுபோல மதக்கடை வியாபாரிகள் கோவில் கோவிலென்னும் பொருளற்றக் கட்டிடம் வகுத்துக்கொண்டு அதனுட்பலவகை விக்கிரகங்களைப் பரப்பி அந்தசாமி இந்த பாடுபட்டார், இந்தசாமி அந்த பாடுபட்டார், இந்தசாமி அவன் தலையை வெட்டி விட்டார், அந்தசாமி இவன் வயிற்றைக் கிழித்துவிட்டார் ஆதலின் எங்கள் மதமே மதம், நேரே மோட்சம் போகும் மதம், எங்கள் மத தேவர்களே தேவர்கள் எல்லோரையும் காப்பாற்றும் தேவர்களெனக்கூறி தங்கடங்கள் மதக்கடைகளை விருத்திசெய்து அதன் ஏதுவால் சீவிப்போர் உங்கள் சிரம்போகும் அபாயம் நேரிடுமானால் எங்கள் சாமிக்கு பொன்முடி கொண்டுவந்து செலுத்துங்கள், வெள்ளிமுடி கொண்டுவந்து செலுத்துங்கள், வியாதிகண்டவர்கள் கண்ணைப்போலக் கண், காலைப்போலக் கால் வெள்ளியிலேனும், பொன்னிலேனும் கொண்டுவந்து செலுத்துங்கள், சாமிக்கு சாப்பாட்டு சிலவாம் அன்னாபிஷேகச் சிலவுக்குப் பணம் கொடுங்கள், அந்த சாமியை வேண்டிக்கொள்ளப் பணம் கொடுங்கள், இந்த சாமிக்குப் பூசைப்போட பணங்கொடுங்கள் எனக் காணிக்கைக் கொண்டு சீவிக்கும் மதக்கடை வியாபாரிகள் அதிகரிக்கவதிகரிக்க அவர்கள் குடும்பத்தில் அனந்த சோம்பேரிகள் சேர்ந்துவிட்டதுடன் அம்மதக்கடையோர் சொற்களை நம்பி மோசம் போனவர்களும் பெருஞ்சோம்பேரிகளாகி பூர்வபூமி விருத்திகளையும் கைத்தொழில் விருத்திகளையும் விவேகவிருத்திகளையும் மறந்து அந்தசாமி காப்பாற்றுவான் இந்த சாமி ஈடேற்றுவானென்னும் பெருஞ் சோம்பேரிகளாய் தங்கள் சுயமுயற்சியும் சுயக்கியானமுமற்று திகைத்து நிற்கின்றார்கள். அங்ஙனம் சிலர் முயன்று பூமிவிருத்தி செய்ய ஆரம்பித்த போதினும் வித்தியா விருத்திசெய்ய ஆரம்பித்தபோதினும் தங்கள் யுக்தியையும் முயற்சியையும் பெருக்குவதை விடுத்து இந்த சாமிக்கு வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கவேண்டும், அந்தசாமிக்கு பூசைசெய்து ஆரம்பிக்கவேண்டுமென்னும் அஞ்ஞானத்தினால் எடுத்த முயற்சிக்குன்றி ஈடேற்ற மற்றுப்போகின்றார்கள்.

சுயநலம் பாராட்டும் மதக்கடை சோம்பேரிகளின் பொய்யை மெய்யென நம்பி நிற்போர் தற்கால பிரிட்டிஷ் ஆட்சியில் விவேகமிகுத்த மேலோர்களாம் ஆங்கிலேயர்களுள் இரயில்வே வித்தையை ஆரம்பிக்குங்கால் எந்தசாமியை வேண்டிக் கொண்டார், எந்தசாமிக்குப் பூசைபோட்டார், டெல்லகிராப் வித்தையை ஆரம்பித்தவர் எந்தசாமியை வேண்டிக்கொண்டார், எந்தசாமிக்குப் பூசைபோட்டார். டிராம்வே வித்தையைக் கண்டுபிடித்தவர் எந்தசாமியை வேண்டிக்கொண்டார், எந்தசாமிக்குப்பூசை போட்டார். யாதுமின்றி தங்கள் தங்கள் அறிவையே மேலுமேலும் விருத்திசெய்து தங்கள் உழைப்பைப் பாராமலும், பசியை நோக்காமலும், கண்டுஞ்சாமலும் எடுத்தவித்தையை முடித்து தாங்கள் குபேரசம்பத்தை அடைவதுடன் அவ்வித்தையைப் பின்பற்றினோரும் சுகமடைந்துவருகின்றார்கள்.

மதக்கடை பரப்பி சீவிக்கும் சந்ததியோரும் அன்னோர் வார்த்தையை நம்பி நடப்போரும் தங்கள் சுயமுயற்சியையும் அறிவின் விருத்தியையும் விடுத்து பூமியைத் தாங்க ஆதிசேஷனை ஆளாக்கிக்கொண்டதுபோல் தங்கள் வித்தியாவிருத்தியையும், விவேக விருத்தியையும் ஒட்டுக் கொடுத்துத் தாங்கவோர் ஆண்டவனைத் தேடுகிறபடியால் அந்த ஆண்டவனும் உய்த்து நோக்கி இந்த சோம்பேரிகளிடம் போனால் எல்லாபாரத்தையும் நம்மெய் சுமக்க