பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
260 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

எட்வர்ட் இந்திய சக்கிரவர்த்தியாரை கியாபிக்க செய்வரேல் கனந்தங்கிய ஏழாவது எட்வர்ட் இந்திய சக்கிரவர்த்தியார் கியாபகமும், இராஜவிசுவாசமும் என்றும் நிலைநிற்கும்.

“ஏழாவது எட்வர்ட் இந்திய சக்கிரவர்த்தியம்” எனும் புத்தகத்தை அச்சிட்டு நாலாவது ஸ்டான்டார்ட் வகுப்பிலிருந்து மெட்டிரிக்குலேஷன் வரையில் வாசிக்கக் கூடிய சகல பாஷையிலும் வரைந்து வாசிக்கச்செய்வதே இராஜ விசுவாசச் சிறந்த மிமோரியலாகும்.

- 3:51: சூன் 1, 1910 -


138. ஓர் கிறிஸ்தவரை ஆரிய சமாஜத்தில் சேர்த்துக் கொண்டார்களாமே

ஈதோர் நூதன சமாஜம்போலும். அந்தோ, பிரம சமாஜமென்பது ஒன்றுண்டு. அவர்களுக்கோ பிரமமென்பது ஒன்றுண்டு. அதைசிந்திப்பதும் பஜிப்பதுமே பிரம சமாஜமென்று தோன்றியுள்ளார்கள். அதுபோல் இந்த ஆரியமென்னும் பொருள் ஒன்றுண்டா. அப்பொருளின் விவரத்தை எந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆரியமென்னும் ஓர் பொருளுமில்லை அதை விளக்கும் புத்தகமும் இல்லாமற்போமாயின் ஓர் கிறிஸ்த்தவர் ஆரிய சமாஜத்திற் சேர்ந்தாரென்பதின் பயனென்னை.

“தலைநோய்க் கண்டவன் தலையணை வுறையை மாற்றிப்போட்டுக் கொள்ளுவது போல்” இராயப்பனென்பவென் இராஜகோபலனென்னும் பெயரை மாற்றிக்கொள்ளுவதால் உண்டாம் பயன் யாது. பழய ராயப்பனேயன்றி புது ராஜகோபாலனென்னுங் குணாகுணம் மாறுமோ. உள்ளப் பொய்யில் ஒரு பொய்யும் மாறாது. உள்ளக் கொலையில் ஒரு கொலையும் நில்லாது. உள்ளக் குடியில் ஒரு வஸ்துவுந் தள்ளாது உள்ள காமியத்தால் ஒரிச்சையு மாறாது நிற்போர் பெயரை மாற்றினும் பயனென்னை. உடையை மாற்றினும் பயனென்னை ஆரிய சமாஜத்தை யாவரும் பின்பற்றினும் பயனென்னை.

இவைகள் யாவும் சமயயுக்த சமாஜங்களும், சமயயுக்த மதங்களுமே யன்றி உலக சீர்திருத்த மதங்களாகாவாம். அதாவது:- சாதி பேதங்களை இத்தேசத்தில் உண்டு செய்தவர்கள் ஆரியர்களென்றே கூறுவர். அக்கூற்றை யாவராலும் கொண்டாடி அங்கீகரிக்கத்தக்க புத்தகங்களையும் ஏற்படுத்தி அந்த சாதிபேதம் இந்த சாதியுடன் புசிக்கப்படாது, இந்த சாதியோன் அந்த சாதியுடன் புசிக்கப்படாது, சேரப்படாது, அவ்வகை மீறி சேரினும் புசிக்கினும் அவரவர்களுக்கு ஓர் சாதிப்பெயரை அளித்து நாலுசாதிகள் என்பதை நூற்றியெட்டு சாதிகளாக்கி, நூற்றியெட்டை ஆயிரத்தியெட்டு சாதிகளாகப் பெருக்கி தேசச் சிறப்பையும் தேச ஒற்றுமெயையும் கெடுத்து பாழ்படுத்தியக் கூட்டத்தோர்களே சகலமதத்தோர்களையும் சகல சாதியோர்களையும் பிராயச்சித்தஞ் செய்து சேர்த்துக்கொள்ளும் செயலால் சமய யுக்த சமாஜங்களென்றே கூறுதற் கூறாதமையும் ஆதலின் பொய்சாதிக் கட்டுக் கதைகளை ஏற்படுத்தி பேதைமக்களை அடக்கி ஆண்டுவந்தார்களென்பது அவர்கள் காலத்திற்குக் காலம் “உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு” என்பதுபோல் செய்துவருஞ் செயல்களே போதுஞ் சான்றாம்.

இத்தகையப் பொய்ச்சாதிக் கட்டுப்பாடுகளையே காலத்திற்குத் தக்கவாறு மாற்றுகின்றவர்கள் சமாஜங்களையும் எவ்வகையாக மாற்றி எவ்வகையாகத் தங்களை உயர்த்திக்கொள்ளுவார்களோ, அவற்றை பெயரை மாற்றிக் கொள்ளுகிறவர்களும் மதத்தை மாற்றிக்கொள்ளுகிறவர்களும் சிந்திக்க வேண்டியது அவசியமாம்.

இத்தேசத்தில் சாதிபேதப் பொய்க் கட்டுபாடுகளை எப்போது ஏற்படுத்திக்கொண்டார்களோ அதுமுதல் எங்கள் கோவிலுக்குள் வந்தால் தீட்டாகிவிட்டது, அதைத் தீண்டி விட்டான் தீட்டாகிவிட்டது, கும்பாபிஷேகம் செய்யவேண்டுமென்னும் கூத்தாடுவோர் அவைகள் யாவையும் மறந்து சகலசாதியோரையும் சகல மதத்தோரையும் பிராயச்சித்தஞ்செய்து தங்கள் ஆரியமதத்தில் சேர்த்துக்கொள்ளுவதாயின் கும்பாபிஷேகமென்னும் கூற்றுகள்