பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 277
 

அடக்கி வருவார்கள். நகரக் கள்ளர்களையும் நகர துஷ்டர்களையும் நகர சோம்பேறிகளையும் அடக்கி சீர்திருத்துவதற்கும் இவர்களே வல்லவர்களாகும்.

இத்தகைய வல்லவர்களே நகரப் பாதுகாப்புக்கு உரியவர்களாகும். தற்காலம் இச்சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள் போலீசு உத்தியோகத்திற்குப்போய் சேரும்படியான முயற்சி செய்தபோதினும் அவ்வுத்தியோகத்தில் தலைவர்களாயிருந்து இவர்களை சேர்ப்பவர்களும் அளவிட்டு உத்தியோகத்தில் நியமிப்பவர்களும் சாதித்தலைவர்களாய் இருப்பார்களாயின் சாதிபேதமற்ற திராவிடர்களை சேர்க்கக்கூடாத உபாயங்கள் செய்து தங்களையொத்த சாதியுள்ளவர்களாயின் எவ்வகை தேகிகளாயினும் சேர்த்துக்கொண்டு வருகின்றார்கள்.

இத்தகையப் போலீஸ் நியமனச் சேர்க்கைகளைக் கருணைதங்கிய ஆங்கிலேயே துரைமக்களே முன்னின்று அவரவர்களை நேரிலழைத்துக் கண்ணோக்கமிட்டு நியமிக்கும்படி வேண்டுகிறோம். அங்ஙனமின்றி போலீஸ் நியமன அதிகாரத்தை சாதித்ததலைவர்கள் வசம் விட்டுவிடுவதாயின் சாதிபேதமற்ற திராவிடர்கள் போலீசு உத்தியோகத்தில் விருத்தி பெறுவது மிகக் கஷ்டமேயாகும்.

சாதித்தலைவர்கள் செயலோவென்னில் தாங்கள் உத்தியோகம் அமர்ந்து பணம் சம்பாதிக்கவேண்டியவிடங்களிலும், தொழில்களிலும் சாதியாசாரம் சமயாசாரம் கிடையாது. இந்த சாதிபேதமற்ற திராவிடர்கள் உத்தியோகஞ் செய்யவேண்டிய இடங்களிலும், பணம் சம்பாதிக்கவேண்டிய இடங்களிலுமெல்லாம் சாதியாசாரம் சமயாசாரங்களைக் காட்டி இவர்களை முன்னுக்கு வரவிடாமற் செய்துவருகின்றார்கள். ஆதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் சாதிபேதமற்ற திராவிடர் மீது கண்ணோக்கம்வைத்து சகலசாதியோர்களைப்போல் சமரசச்சீரும் சுகமும் அளிக்க வேண்டுகிறோம்.

- 4:12; ஆகஸ்டு 31, 1910 -


152. வித்தியாவிருத்தி சாலைகள் விசேஷமுண்டா வேஷவிருத்தி சாலைகள் விசேஷமுண்டா

வித்தியாவிருத்தி சாலைகளாவன - காகிதங்கள் செய்யும் சாலைகளும், பென்சல்கள் செய்யும் சாலைகளும், மைகள் செய்யும் சாலைகளும், இரப்பர்கள் செய்யும் சாலைகளும், பிஸ்கட்டுகள் செய்யும் சாலைகளும், மாச்சிஸ்கள் செய்யும் சாலைகளும், வஸ்திரங்கள் செய்யும் சாலைகளும், தானியங்களை விருத்திசெய்யும் சாலைகளும், இரும்புக்கருவி சாலைகளும், தகரக் கருவி சாலைகளும், நகரக்கருவி சாலைகளும், பொன்சுரங்கச் சாலைகளும், இரத்தின சுரங்கச் சாலைகளும், மரக்கருவி சாலைகளும், மண்ணெய் சுரங்க சாலைகளும், பசும்பால் சுரங்கச்சாலைகளும், பசுநெய் சுரங்கச் சாலைகளும், கனிரச விருத்தி சாலைகளும் மற்றுமுள்ளவைகளேயாம். இத்தகைய சாலைகளையே வித்தியாவிருத்தி பிரஜா விருத்தி, தேசோ விருத்தி, சுக விருத்தி இவற்றிற்கு மூலமென்று கூறப்படும்.

அந்தந்த தேசத்திலுள்ள விவேகவிருத்தி பெற்ற மக்கள் ஒவ்வொரு வரும் தங்களிடம் சொற்ப திரவியமிருப்பினும் அவற்றை மேலுமேலும் விருத்தி செய்யும் பொருட்டு அவரவர்கள் விருத்திக்கு எட்டியப் பொருட்களைக் கொண்டு சாலைகளை நிருமித்து அந்தந்தத் தொழிலாளர்களைச் சேர்த்து அதனதன் விருத்தி முயற்சியினின்று எடுத்தகாரியத்தை தொடுத்து முடித்துத் தாங்கட் குபேர சம்பத்தை அடைவதுடன் தங்களை அடுத்தவர்களையும் குபேர சம்பத்துடையவர்களாகச் செய்து வருகின்றார்கள்.

தெய்வத்தால் ஆகாது தங்கடங்கள் முயற்சியாலாகுமென முயன்று செய்துவரும் தங்களது இடைவிடா சாதனத்தால் புகைக் கப்பல், புகை ரதம், ஆகாய ரதம், டெல்லகிராப், போனகிராப், லெத்த கிராப், டிராம்வே, போட்டோகிராப் மற்றும் அரிய வித்தைகளையும் கண்டுபிடித்து அதற்கு சாலைகளும் வகுத்து அந்தந்த வித்தைகளைப் பெருக்கிவருந் தங்கடங்கள்