பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/335

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் 287
 

சாதித்தலைவர்களையும், மதத்தலைவர்களையும் பின்பற்றுவதாயின் தற்காலம் கருணை தங்கிய ராஜாங்கத்தார் அளித்துவரும் உள்ள சீருங் கெட்டு பாழடைவதாகும். ஆதலின் நமதுதேய வேளாளத்தொழிலாளர்கள் யாவரும் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் செய்தும் போதித்துவரும் விவசாயத் தொழிலைப் பின்பற்றி, அவர்கள் அழைக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்கள் விவசாயப் போதனைகளைக் கற்று அவரவர்கள் பூமிகளைப்பண்படுத்தி தானியவிருத்திசெய்து உலக உபகாரிகளாக விளங்குவார்களென நம்புகிறோம்.

கம்பர் ஏறெழுபது

வெங்கோபக் கலிக்கடந்த வேளாளர் விளைவயலுட்
பைங்கோல முடிதிருந்த யார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதைக் களியானை போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்குங்கோல் ஏறடிக்குஞ் சிறுகோலே.

வரப்புயர நீருயரும், நீருயர பயிறுயரும், பயிறுயர குடியுயரும், குடியுயர கோனுயரும் என்பதாம்.

- 4:17; அக்டோபர் 5, 1910 -


159. இந்தியதேசமும் இந்தியதேச மக்களும் எவ்வகையால் சீரும் சிறப்பும் பெறுவர்

தங்கள் தங்கள் முயற்சிகளினாலேயாம். அதாவது, நமது தேசத்து தனவான்களுக்கு ஈகையென்னும் குணமே மாறி வாகையென்னுங் குணம் பெருகிநிற்கின்றது ஈகையின் குணமோவென்னில் தாங்கள் சம்பாதித்துள்ளப் பொருளைக் கொண்டு ஏனையோரும் தன்னைப்போல் சுகம்பெறவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் பொருளீய்ந்து போஷிப்பது ஈகையின் குணமாகும். வாகையென்னும் குணமோவென்னில் தனது கைக்குவந்தவரையில் கிடைத்த பொருளை மேலும் மேலும் சேர்த்து பெட்டியில் பூட்டிடுவதும், மண்ணுள் புதைத்து வைப்பதுமே மகிழ்ச்சியாதலால் அவற்றை வாகையின் குணமென வகுத்துள்ளார்கள்.

இவ்விருகுணத்தோருள் வாகைகுணத்தோரே மிகுத்து, ஈகைகுணத்தோர் நசிந்துவிட்டபடியால் இலவசமான கல்விசாலைகளும் கைத்தொழிற் சாலைகளும் அமைத்து சிறுவர்களை சீர்படுத்துவதற்கு ஏதுவில்லாமலிருக்கின்றது. ஆதலின் இந்திய சிறுவர்களை சீர்திருத்தி இந்தியாவை சிறப்படையச் செய்யவேண்டுமாயின் சகல இந்தியர்களும் ஒருமனப்பட்டு தங்கள் இந்துக்கோவில்களிலுள்ள சாமிகளை சகலரும் பார்த்துத் தொழும் வழியில் திறந்துவிட்டு உள்ளிருக்கும் மண்டபங்களை விருத்தி கட்டி கல்வி கற்பதற்கும் வெவ்வேறு கூடங்களை வகுத்து அக்கோவில்களுக்கு மானியமென விட்டிருக்கும் பூமிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் தட்சணை தாம்பூலங்களாலும் சேரும் பெருட்களை எட்டு பாகமாக்கி இரண்டு பாகத்தைக் கோவில் சிலவுகளுக்கும், இரண்டு பாகத்தை கட்டிட விருத்தி சிலவுகளுக்கும், மிகுந்த நான்கு பாகத்தைக்கொண்டு சிறுவர்களைக் கல்வியிலும் கைத்தொழிலிலும் விருத்திக்குக் கொண்டுவருவரேல் இந்தியர்கள் சிறப்படைவதுடன் தேசமும் சிறப்படையும்.

இவ்வகையால் ஏற்படுத்தும் கல்விசாலைகளிலும், கைத்தொழிற்சாலைகளிலும் சாதியுள்ளவர்கள்தான் வந்துக் கற்றுக் கொள்ளவேண்டுமேயன்றி சாதியில்லாதவர்கள் வந்து கற்கப்போகாதென தடுப்பார்களாயின் உள்ளசீருங்கெட்டுப் பாழடைந்து போவார்கள். காரணமோ வென்னில் தற்காலமுள்ளப் பெருங் கோவில்களெல்லாம் சாதிபேதமில்லாப் பூர்வபௌத்தர்களுடையவைகளேயாகும். தற்கால சாதியாசாரமுடையவர்களுக்கோ அவற்றுள் யாதொரு சுயாதீனமும் கிடையாது. ஆதலின் இந்திய தேசப் பொதுப்பொருளை சகலமக்களும் பொதுவாக அநுபவிப்பதே சுகந்தரும். இத்தேசத்துப் பூர்வக்குடிகளாகும் சாதிபேதமற்றவர்களுக்கு அங்கு