பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/367

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரசியல் / 319
 

விஷயத்திலும், வியாபார விஷயத்திலும், இராஜாங்க உத்தியோகவிஷயத்திலும் சமசரபாதை அளிப்பதே ஆனந்தமாகும்.

- 4:32; சனவரி 18, 1911 -


185. உலகத்தில் நீதிநெறி நிறைந்து தங்களைப்போலவே மற்றவர்களையும் மனிதர்களாகப் பாவிக்கும் இராஜாங்க மெவை

பிரிட்டிஷ் ராஜாங்கம் ஒன்றேயாம். அதாவது, மற்றயதேச அரசர்களெல்லாம் தாங்கள் எங்கு சென்றபோதினும் அவரவர்கள் சுகத்தையும், அவரவர்கள் சுயகாரியப் பிரயோசனங்களையுங் கருதியே தங்கள் ராட்சியபாரத்தை நடாத்துவது இயல்பாம். அதுவுமன்றி ராஜகீய பாரதூர நியமனங்களையுந் தன்னவருக்கு ஈய்ந்து தங்கள்மட்டிலுமே அதிகாரிகளாக விளங்குவார்கள்.

மற்றும் அன்னியதேச அரசர்களின் நியமனங்கள் அவ்வகையாயினும் நீதிநெறி ஒழுக்கங்களோ அம்மட்டும் அம்மட்டேயாம். சகலரும் ஏகபாஷை ஏகமக்களாயினும் தன்மதம் பிறர்மதமென்னும் பேதத்தாலும், தன் தெய்வம் பிறர்தெய்வமென்னும் பிரிவினாலும் நீதிநெறி அமைந்த புருஷர்களையும், விவேகமிகுந்த பெரியோர்களையும் உதிரம் பெருகிவழியக் கொன்றதுமன்றி நெருப்பிலிட்டுச் சுட்டுக் கொன்றிருக்கின்றார்கள். தங்களது மதங்கள் பரவவேண்டி அந்தந்த தேசமக்களை வதைத்து உதிரமோடச் செய்திருக்கின்றார்கள் இத்தகைய கொடூரச் செயல்களே அவர்களது நீதிநெறி ஒழுக்கங்களாகும். இராஜாங்கந் தாங்களே, இரீஷிகளுந் தாங்களே ஆளுகை செலுத்திக்கொண்டு வஞ்சித்துப் பொருள்சேர்ப்பதே அவர்களது இராஜகீயச் செயல்களாகும்.

அன்னியதேச ராஜகீயமும், நீதிநெறியும் அவ்வகையாயின் சுதேசிய மென்னும் இந்தியதேச அரசற்றக்குடிகளின் செயல்கள் யாதென்னின், சாதிபேதமென்னும் பொய்யாகியக் கட்டுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பொய்க்கட்டுப்பாடுகளுக்கு எதிரிடையாய விவேகமிகுத்த மேன்மக்களை கீழ்மக்களெனத்தாழ்த்தி மிருகங்களிலுந் தாழ்ச்சியாக நடத்தி மநுகுலத்தோரை மனிதர்களாக நோக்காது தங்களைப்போல் நல்லாடை அணையவிடாமலும், தங்களைப்போல் சவரஞ் செய்துக் கொள்ளவிடாமலும், தங்களைப்போல் உடலஞ் சுத்திசெய்ய குளங்களின் அருகேயும், கிணறுகளினருகேயும் நெறுங்கவிடாமலும் செய்வது இத்தேசத்திற் பெரியசாதியெனப் பெயர்வைத்துள்ளவர்களின் ஒழுக்கங்களும் தன்மதமே மதம் தன் தெய்வமே தெய்வமென சிறப்பித்து ஏனையோரை கழுவிலும், கற்காணங்களிலும் வதைத்து உதிரம் பெருகத் துன்பஞ்செய்யுங் குணமே நீதிநெறியும் சீவகாருண்யமும் என்னப்படும்.

சுயதேசமாம் இந்தியர்களில் பெரியசாதியோரென்போர்நீதிநெறி ஒழுக்கமும் காருண்யமுமற்றச்செயலுங்கண்காட்சியாதலின் இவைகளையகற்றி பிரிட்டிஷ் ஆட்சியின் பேரானந்த ராஜகீயத்தையும் நீதிநெறி ஒழுக்கங்களமைந்த சீவகாருண்யத்தையும் ஆலோசிப்போமாக. தங்களது ஆட்சியாய ராஜகீயத்தில் தன்னவ ரன்னியரென்னும் பேதம் பாராமலும், மதத்தில் தன்மதம் பிறர்மதமென்னும் விரோதங்கொள்ளாமலும், தெய்வத்தில் தன் தெய்வம் பிறர்தெய்வமென்னும் சிந்தை வையாமலும் மங்குலத்தோர்களை மநுகுலத்தோர்களாகவே பாவித்து இத்தேச மனுக்களில் பெரியசாதியோர்களாயினும், சிறியசாதியோர்களாயினும், கனவானாயினும், பிச்சை ஏற்பவனாயினும், தமிழனாயினும், துலக்கனாயினும் கல்விகற்று விவேக மிகுத்திருப்பாராயின் சமரச ராஜகீய உத்தியோகங்கள் அளித்து சகல மனுக்களையும் தங்களைப்போல் எண்ணி தங்களைப் போலவே சகலரையும் சுகம்பெறச் செய்வார்கள்.

தாங்கள் சுத்தமாகப் புசிப்பதுபோல் மற்ற மனுக்களையும் சுத்தமாகப் புசிக்கச்செய்வார்கள். தாங்கள் சுத்த ஆடைகளை அணைவதுபோல் மற்றவர்களையும் சுத்த ஆடை அணையச்செய்வார்கள். தாங்கள் சுகமாக