பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/432

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
384 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


ஏழைகளை சுத்தநீரை மொண்டு குடித்து சுகம் பெறுங் கருணை இவர்களிடம் இருக்குமாயின் மிஸ்டர்பாண்டியனென்போர் ஏழை குடிகளுக்குப் பிரத்தியேக கிணறு தோண்டுவதற்காகப் பணஞ்சேகரிக்க வெளிவந்திருக்கமாட்டார்.

சுத்தநீரைமொண்டுகுடிக்கவிடாத லோபத்துவத்தினாலையே ஏழைக்குடிகள் பயிரிட்டுத் தின்பதற்கு பூமியுங் கிடைக்கமாட்டாது, சுகம் பெறுவதற்கு வழியுமுண்டாக மாட்டாது என்பவை அனுபவத்தால் விளங்குகிறபடியால் இவர்களது கஷ்டநஷ்டங்களை கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்கு விளக்கி மற்ற மனிதவகுப்போர்களுடன் இவர்களையும் ஓர் மனித வகுப்போரென முன்னேறச் செய்வதற்கு லெஜிஸ்லேட்டிவ் கௌன்சல் மெம்பராக இவர்களுக்கென்றொருவரைத் தெரிந்தெடுத்து நியமிக்கும்படி வேண்டுகிறோம்.

- 5:22; நவம்பர் 8, 1911 -


236. இலஞ்சமென்னும் பரிதானம் வாங்குதல் நீதிபக்தியாளரிடமுண்டா அன்றேல் சாமிபக்தியாளரிடமுண்டா

நீதிபக்தியாளனோ மறந்தும் இலஞ்சம் வாங்கமாட்டான். காரணமோவென்னில் நீதியின் பேரில் பசிதாகமுடையவனாகவும், நீதியையே பின்பற்றி நடப்பவனாகவும் உள்ளபடிப்பால் தான் சம்பாதிக்கக்கூடிய பொருளே தனக்குப் போதுமென்னுந் திருப்தியிலுள்ள வனாகிப் பேராசையை அகற்றி வாழ்வனாதலின் ஏழைகளை வஞ்சித்தும் துன்பப்படுத்தியும் பரிதானமென்னும் லஞ்சம் வாங்கிப் பாபமூட்டையைக் கட்டிக் கொள்ளமாட்டான்.

அங்ஙனம் அவர்கள் செய்துவரும் நன்றியை மறவாத சிலர் கேட்காமலே பரிதானஞ்செய்யினும் அவற்றை ஏழைகளுக்கு தானஞ்செய்துவிடுவார்களன்றி தங்கள் சுய உபயோகத்திற்கு வைக்கமாட்டார்கள். நீதி பக்தியாளராதலின் ஏழைகளுக்குத் தாங்களே உதவிசெய்து ஆதரிக்க வேண்டுமென்னும் ஈகையில் நின்று துற்கன்மங்களை அகற்றி நற்கன்மங்களில் நிற்பவர்களாதலின் ஏழைகளை வஞ்சித்தும், துன்பப்படுத்தியும், பயமுறுத்தியும் பரிதானம் வாங்கித் தனது பெண்சாதி பிள்ளைகளை போஷிக்கமாட்டார்கள். ஏனென்பீரேல், ஏழைகள் மனம் வருந்தியுந் துக்கித்தும் அளித்துவரும் இலஞ்சமே வாழைப்பழத்தில் ஊசி நுழைவதுபோல் துற்கன்மம் நுழைந்து பலவகைத் துன்பத்துக்காளாக்கி பழய நீரை புதுவெள்ளம் அடித்துப்போவதுபோல் தான் சம்பாதித்தப் பொருளையுந் தன்னையறியாது கொண்டுபோவதுடன் மாளாதுக்கத்தில் ஆழ்த்திவிடுமென்று அறிந்துள்ளபடியினாலேயாம்.

நீதிபக்தியுள்ளவன் சருவ சீவர்களையும் தன்னுயிர்போல் எண்ணுவோனாதலின் மநுமக்களைத் தன்னவராக மென்மேலும் பாவித்து தன்னாற் கூடிய உதவிபுரிந்து ஈடேற்றுவான். தன்னால் உதவிபுரியப் பொருளற்றிருப்பனேல் சகலருக்கும் நல்லவனாக நடந்துக்கொள்ளுவான். ஏழையாயினும் சீலப்பொருளே மேலைப்பொருளென்றெண்ணி எக்காலும் ஆனந்த சுகவாழ்க்கையிலிருப்பான்.

சாமிபக்தியாளரோ தாங்கள் செய்யுங் குற்றங்களுக்கு ஆட்டுக்கடா, கோழி, பணம், கண்ணைப்போல் வெள்ளியால் பொன்னினால் செய்த கண், காலைப்போல் வெள்ளியால் பொன்னினால் செய்தக்கால், உண்டிபணம் முதலியதைத் தாங்கள் தொழூவுஞ் சாமிகளுக்குக் கொண்டுபோய் இலஞ்சங் கொடுத்துவிட்டால் சகல குற்றங்களும் நீங்கிப்போமென்பது நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கைகளுக்கு மதக்கடை பரப்பி சீவிப்போர் பலசரக்குக் கடைக்காரர்கள் எங்கள் சரக்கே முதல் தர சரக்கு மற்ற சரக்கெல்லாம் மட்டச்சரக்கென்பதுபோல் எங்கள்சாமி பெரியசாமி, எங்கள்சாமியே நல்லசாமி, சகல ராஜாக்களையும் ஆளுகிற சாமியென்னும் பெரும் பொய்யைச்சொல்லி சாமிக்கென லஞ்சம் வாங்கி சீவிக்கும் மதக்கடைகள் பலவிடமும் பெருகிவிட்டபடியால் சாமிகளே ஆடு மாடுகளையுங் கோழிகளையும், வெள்ளி உருக்களையம், பொன்னுருக்களையும், உண்டிபெட்டி பணங்களையும் இலஞ்சம் வாங்கிக்கொண்டு வியாதிகளை நீக்குகிறதும், ஆபத்துகளைக்