பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/450

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
402 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

இருக்கின்றனவென்றும் கருணைதங்கிய ராஜாங்கத்தில் ஏழைக்குடிகள் முன்னேறும் வகைகளில் ஏதேது தடைகளுண்டாகிக்கொண்டுவருகிறதென்றும். தன்னவரன்னியரென்னும் பட்சபாதமற்ற அரசாட்சியில் சாதிபேதம் வைத்துள்ளக் கூட்டத்தோர் மட்டிலும் சகல சுதந்தரிகளாக சுகசீவனம் பெற்று வாழ்வதும், சாதிபேதமில்லா ஆறுகோடி மக்கள் ஏதொரு சுதந்திரமுமின்றி அல்லலடைந்து கெடுவதுமாகிய சீர்கேடுகள் யாவையும் விளக்கி விண்ணப்பங்கள் அநுப்புவதாயின் இத்தேசத்தின் நெடுநாளய அநுபவமுடைய மகான் அவற்றை சுருக்கத்தில் உணர்ந்து வேண்டிய சுகங்களை அளித்து ஆதரிப்பாரென்று நம்புகிறோம்.

ஏழைக்குடிகளின் அதிர்ஷ்ட பாக்கியங்களுமே எல்லாமறிந்த மகான் கவர்னராக ஆக்ட்டிங் செய்கின்றார். குடிகளின் குறைகள் யாவையும் நன்கறிவார். குறைகளை நீக்கும் வழிகளையும் தெரிந்து செய்வார். இத்தகையத்தெரிந்த கவர்னரைக் காணுவது மிக்க அரிதேயாம். ஏழைக்குடிகளின் கஷ்டநஷ்டங்களை கவர்னரது சங்கத்திலெடுத்துப்பேசி சுகச்சிரளிப்பதற்கோர் லெஜிஸ்லேட்டிவ் மெம்பரொருவர் இருப்பாராயின் ஏழைக்குடிகள் யாதுமுயற்சியுஞ் செய்ய வேண்டியதில்லை. அத்தகையமெம்பரொருவரும் இல்லாதபடியால் ஏழைக்குடிகளே முயன்று தங்கடங்கட் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி குறைகளை நீக்கிக்கொள்ள வேண்டியதாயிருக்கின்றது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டுமென்னும் பழமொழிக்கிணங்க, ஏழைக் குடிகளின் இடுக்கங்களெல்லாந்தெரிந்தவரும், கருணை நிறைந்தவரும் கவர்னராக ஆக்டிங் செய்யும்போதே ஏழைக்குடிகளாம் பாஞ்சால கிறாமவாசிகளும் திண்டிவனம் ஏழைக்குடிகளும் மற்றும் கிராம ஏழைமக்களும் தங்கடங்கட் குறைகளை மேலுமேலும் எழுதித் தெரிவிப்பதே அழகாம். அழுதப்பிள்ளைகள்தான் பால்குடிக்குமென்பது அனுபவமாதலின் முயற்சி திருவினையாக்குமென்னு முதுமொழிக்கிணங்கி ஏழைக்குடிகள் யாவருந் தங்கடங்கள் இடுக்கங்களை நீக்கிக் கொள்ளுவதே சுகம். கருணை தங்கிய கவர்னரவர்களும் ஆலோசினை சங்கத்தவர்களும் ஏழைக்குடிகளின்மீது இதக்கம் வைக்க வேண்டுகிறோம்.

- 5:43; ஏப்ரல் 3, 1912 -


250. விவசாயம் விவசாயம் விவசாயம்

சென்னை ராஜதானி தவிர மற்ற தேசங்களிலெல்லாம் அங்குள்ள பண்ணையாட்களாம் விவசாயிகளே முயன்று பூமியைப் பலவகை விருத்திசெய்து பலவகை தானியங்களை விளைவித்து தாங்கள் சுகசீவிகளாக வாழ்வதுடன் தானியங்களைப் பலதேசங்களுக்கும் அனுப்பி அவர்களுக்கும் சுகமளித்து வருகின்றார்கள். இச்சென்னை இராஜதானியிலோ இராஜாங்கத்தோர்களே முயன்று விவசாயகலாசாலைகளை வகுத்தும், வேணப் பொருளுதவிச் செய்தும், பூமியை சீர்திருத்தத்தக்க கருவிகளை ஈந்தும், பலதேச மேலாய விதைகளைத் தருவித்தளித்தும், கிணறுகளுக்குக் கவலையின்றி நீரைக்கிரகிக்கத்தக்க இயந்திரங்களைத் தருவித்தும், ஒவ்வோர்டிஸ்டிரிக்டுகளை ஆண்டுவருங் கலைக்ட்டர்களே விவசாயப் போதகர்களாகத் தோன்றி விவசாயத்தைக் கற்பித்துவருவதுடன் சுட்டுக் கடிதங்களின் மூலமாகவும் பரவச்செய்து வருகின்றார்கள். இத்தியாதி முயற்சியில் ஏதோ சிற்சில இடங்களில் மட்டும் விவசாயவிருத்தியைக் கருதிவருகின்றார்களன்றி பெரும்பாலார் அவற்றைக் கவனிப்பதையே காணோம். இராஜாங்கத்தோருதவியிருந்தும் விவசாயவிருத்திக் குறைந்து வருமாயின் அதன் கேடுபாடுகளை என்னென்று கருதல் வேண்டும். பூர்வ இத்தேசத்து விவசாயிகளரம் வேளாளர்களில்லாக் குறைவேயாம்.

ஏரெழுபது

வெங்கோபக் கலிக்கடந்த வேளாளர் விளை வயலுட்
பைங்கோல் முடித்திருந்தப் பார்வேந்தர் முடி திருந்தும்