பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/502

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
454 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

இராஜ துரோகச் செயல்களும் இராஜதுரோகிகளுந் தோன்றியே இருக்க மாட்டார்கள். அவர்கள் மத்தியில் ஓர் துரோகி தோன்றுவானாயினும் இராஜாங்க விசாரிணைக்கு முன்பே அவன் எலும்புவேறு இறச்சிவேறாகக் கழட்டிவிடுவார்கள். அத்தகைய அன்பும் விசுவாசமும் மிகுத்தக் கூட்டத்தோரைப் பின்னடிவந்த துரைமக்கள் கவனிக்காமலும் முன்னேறச் செய்யாமலும் விடுத்தது அவர்களது நிற்பாக்கியமேயாம். அக்கால் தோன்றிய கருணை நிறைந்த மிஷனெரிமார்கள் உதவியால் ஏழைமக்கள் B.A. M.A., முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றதுமன்றி மிஷனெரி கிறிஸ்தவக் கூட்டங்களையும் பெருக்கிவந்தார்கள். அத்தகையக் கருணையை இதுகாரும் வைத்திருப்பார்களாயின் கிறிஸ்துவின் தன்மம் இந்தியா முழுவதிலும் பரவியிருப்பதன்றி தற்கால வதந்தியாம் போட்டிப் பரிட்சையிலும் அவர்களே முந்துவார்களன்றி பிந்தமாட்டார்கள். அதனிலும் அவர்கள் நிற்பாக்கியம் பின்னாடி தோன்றிய மிஷெனெரிதுரை மக்கள் ஏழைகள்மீது கருணை வையாது பெரிய சாதிகளென்று வேஷமிட்டுள்ளோரைக் கிறிஸ்தவர்களாக்க முயன்றுவிட்ட படியால் மிஷனெரி கிறிஸ்துவின் தன்மப்பரவுதலுங் குன்றி ஏழைமக்களுங் கல்வி விருத்தியுமற்றுவிட்டார்கள்.

மித்திரபேதச் சத்துருக்களால் தாழ்த்தப்பட்டுள்ளக் கூட்டத்தோர் நல்லுதவியும் பராமரிப்பும் பெற்றவுடன் வித்தையிலும் புத்தியிலுங் கல்வியிலும் முன்னேறியதற்குக் காரணம் யாதெனில் பூர்வமுதல்வர்கள் புத்ததன்மத்தைத் தழுவி வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமாகிய நான்கிலும் நிறைந்திருந்தவர்களாதலின் மித்திரபேதச் சத்துருக்களால் நசிந்து சீர்குலைந்திருப்பினும் அவர்களுக்கு நல்லுதவியும் பராமரிப்புக் கிடைத்தவுடன் பூர்வவாசனையே அவர்களை சீருக்குஞ் சிறப்புக்குங் கொண்டுவந்துவிடுகின்றது. அதனாலேயே மித்திரபேதச் சத்துருக்களும் அவர்களை முன்னேறவிடாது சகலவகைகளாலுந் தாழ்த்தித் தலையெடுக்கவிடாமலுஞ் செய்துவருகின்றார்கள்.

இவைகள் யாவையும் ஓர் புறம்பே அகற்றிவிடினும் பிரிட்டிஷ் ஆட்சியாரை வேண்டியும் வாதிட்டும் அதிகார உத்தியோகங்களைக் கேட்பதற்கும் அதன் பயனை அடைவதற்கும் அவர்களே சுதந்திரவாதிகளன்றி மற்று மித்தேசத்தில் வந்து நூதனமாகக் குடியேறியவர்களுக்கு யாதொரு சுதந்திரமும் பற்றுதலுங் கிடையாவாம். சத்துருக்களின் மித்திரபேதத்தால் தாழ்த்தப்பட்டுள்ள தாழ்ந்தவகுப்போர்களென்னப்பட்டவர்களே இத்தேசத்தின் பூர்வக்குடிகளும் சுயாதீனக்காரர்களுமாதலால் அவர்களை ஓர்புறமாக அகற்றி விட்டு நூதனமாக இத்தேசத்திற் குடியேறியவர்களும் நூதனமாய சாதிவேஷம் பூண்டுள்ளவர்களும் இத்தேசத்திய பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார உத்தியோகங்களைக் கேழ்க்க யாதொரு ஆதாரமில்லாதபடியால் தாழ்த்தப்பட்டுள்ளவர்கள் அவர்களைப்போல் உயர்த்தப்படும் வரையில் இந்துக்களென்போருக்குக் கலைக்ட்டர் உத்தியோகங் கொடுக்கப்படாதென்றே துணிந்து கூறுவோம்.

- 6:36: பிப்ரவரி 12, 1913 -

தென்னிந்தியர் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. அதாவது இந்துக்கள் என்போருக்கும் பர்மியர் என்போருக்குமுள்ள இராஜவிசு வாசத்தையும், யதார்த்த குணத்தையும் ஆராய்ந்தறியவேண்டியதேயாம்.

சென்னையில் சிவில்செர்விஸ் கமிஷன் விசாரிணை நடந்தகாலத்தில் இந்துக்கள் என்போரிற் சிலர் பெரும்பாலும் இங்கிலாந்தில் நடக்கும் சிவில்செர்விஸ் பரிட்சையை இந்தியாவிலேயே நடத்தவேண்டுமென்று பிடிவாதமாகப் பேசினார்களன்றி, தங்களுக்குள்ள சாதிபேத வூழல்களையும் அதனால் ஒருவரைத் தாழ்த்தியும் ஒருவரை உயர்த்தியும் நசித்துத் தலையெடுக்கவிடாமல் நடத்திவருங் கேடுபாடுகளையும் நன்குணராது தாங்கள் மட்டிலும் சகலசுகங்களையும் அனுபவித்துக்கொண்டு ஏனையோர் யேதுகெட்டுப்போனாலும் போகட்டுமென்னும் சுபகாரியக் கட்சியில் பேசியதுமன்றி தேசத்தை ஆண்டு சீர்திருத்தி தேசமக்கள் யாவரையும் பேதமின்றி சுகச்சீர்பெறச் செய்துவரும் ஐரோப்பியர்களே அந்தஸ்தான உத்தியோகங்