பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/522

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
474 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

இக்கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியில் தேசசிறப்பும் சகல சாதியார் முன்னேற்றமும் வேண்டுமாயின் நன்கு வாசித்தவர்களுக்கு இராஜாங்க உத்தியோக சாலைகள் ஒவ்வொன்றிலும் நான்கு ஐரோப்பியர் நான்கு யூரேலியர் நான்கு பிராமண ரென்போர் நான்கு மற்ற சாதி வகுப்பிற் சேர்ந்தவர்கள் நான்கு முகமதியர் நான்கு கிறிஸ்தவர்கள் நான்கு பௌத்தர்கள் இருக்க வேண்டும் என்னும் விதியையுங் கண்டிப்பாக விதித்து விடல் வேண்டும். அவ்வகுப்பிற்குத் தக்கவாறு கிடையாவிடின் அவைகள் கிடைக்கும் வரையில் ஐரோப்பியர்களேனும் யூரேஷியர்களேனும் அவற்றை நடாத்தி வருவதே உத்தமாம். இத்தகைய சாதனத்தை இத்தேசத்திற் கொண்டு வந்து விடுவார்களாயின் சகல மனுமக்களும் உற்சாகம் அடைவதுடன் பேரானந்த வாழ்க்கையும் பெறுவார்கள். இராஜாங்க உத்தியோகமே பெறல் வேண்டுமென்று கல்விகற்போர் எல்லோருந் தன்னிற்றானே அடங்கி கைத்தொழில் விருத்தியிலும் விவசாய விருத்தியிலும் தங்கள் கருத்தை செலுத்துவார்கள். பெரியசாதிக்குப் பெரிய உத்தியோகம், சின்ன சாதிக்கு சின்ன உத்தியோகம் என்னும் பொறாமெச் செயல்கள் யாவும் அகன்றுபோம். நன்கு வாசித்துக்கொண்டு உத்தியோகம் இல்லாமல் திரியும் ஐந்துபேர் சேர்ந்துக்கொண்டு ஐயாயிரம் பெயரைக் கூட்டமிட்டு சுயராட்சியம் வேண்டும் என்னும் சுத்த வீரர்களெல்லாந் தானே அடங்கிப் போவார்கள். அதனால் தேசவிவகாரக் கலகங்கள் ஒழிந்து, வித்தை விவகாரங்களும் விவசாய விவகாரங்களும் பெருகிப்போம் எங்கும் உள்ள இராஜ துரோகிகளும் மறைந்து இராஜ விசுவாசிகளே பெருகி நிற்பார்கள், அக்கால் இராஜ துரோகிகள் தோன்றினும் எளிதில் அறிந்துக்கொள்ளவும் கூடும், சகலசாதியோரையும் ஒரு குடை நீழல் ஆளுவது பிரிட்டிஷ் ஆட்சியாதலின் சகலமக்களையும் முன்னேற்றி சுகம்பெறச் செய்ய வேண்டியதும் அவர்களை ஆள்வதும் நீதி செங்கோலாதலின் சகலரும் முன்னேறும் படியான சட்டத்தையும் வகுப்பார்களென்று நம்புகிறோம். இப்பொதுவாய விதி தோன்றுவதாயின் சகலமக்களும் கல்விவிருத்தியால் முன்னேற்ற உச்சாகம் பிறந்து உத்தியோகம் பெறவும் முநிவார்கள். ஒரு சாதியோர் கூட்டமே இராஜாங்க உத்தியோகங்களிற் பெருகுவதற்று பலசாதியோரும் இராஜாங்க உத்தியோக சாலைகளில் நிறைந்திருப்பார்கள். அதனால் இராஜாங்க உத்தியோக நடவடிக்கைகள் செவ்வனே நடைபெறுவதுடன் பிரிடிஷ் ஆட்சியோரும் ஆறுதலுற்றிருப்பார்கள். ஆதலின் ஒரு கூட்டத்தோர்மட்டிலும் பல்லக்கு ஏற வேண்டும் என்னும் முயற்சிகளற்று பலகூட்டத்தோரும் பல்லக்கு ஏற முயலுவார்கள். அப்போதே நம்தேசஞ் சீர்பெறும், தேச மக்களுஞ் சுகம் பெறுவார்கள்.

- 7:3; சூன் 25, 1933 -


294. சென்னை இரயில்வே அதிகாரிகள் ஏழைகளை எதிர்க்கின்றார் போலும்

உலகத்தில் மனு மக்களது குழவிகள் தனது தாய்தந்தையரைக் கேட்டும், வருந்தியும், அழுதும் தங்களுக்கு வேண்டியவைகளைப் பெற்றுக்கொள்வது வழக்கமாகும். அவைபோல் வடயிந்திய, தென்னிந்தியமெங்கும் பெருஞ்சோம்பேறிகள் பூமிகளைப் பெற்றுக்கொண்டு அதனைச்சீர்திருத்தாமலும், பண்படுத்தாமலும், உழுது பயிரிடாமலும், நீர்வசதிகளை உண்டு செய்யாமலும், வஞ்சகர்கள் கூடி வானத்தை நோக்கில் மழை பெய்யாமலும் தானியவிருத்திக் குன்றி, ரூபாயிற்கு 4 படி அரிசி விற்பதுடன் பலதானியங்களுங் குறைந்து பஞ்சமென்னும் நிலைக்கு வந்துள்ளபடியால் இரயில்வே உத்தியோகஸ்தர்களில் ஏழைகள் யாவருங்கூடி தங்கள் பசியின் கொடிதால் இரயில் அதிகாரிகளை நாடி, தங்கள் தங்கள் சம்பளங்களில் கிஞ்சித்து சேர்த்துக் கொடுக்கும்படி விண்ணப்பித்துள்ளதாக விளங்குகின்றது.

அத்தகைய விண்ணப்பத்தை ஏழைகளுக்குத் தாய்தந்தையர்போல் விளங்கும் இரயில்வே அதிகாரிகள் கண்டு இதக்கமுறாது அவர்கள்மீது கலஞ்சாதிப்ப