பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/577

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமூகம் / 529
 

3-வது, க்ஷத்திரியன் என்பது புஜபல பராக்கிரம சஷாத்திரியன் என்னப்படும். அதாவது தனது புஜ பல வலிமெயாலும் மன்னு திடத்தினாலும் துட்ட மிருகங்களுக்கு அஞ்சாது வேட்டையாடி துண்டித்தலும், எதிரிகளின் ரத, கஜ, துரக, பதாதீகள் ஏராளமாக நிற்கினும் மன்னு திடங்குறையாமலும் பின்முதுகு காட்டாமலும் முன்மார்பு கொடுத்து போர்புரியும் க்ஷாத்திரியன், க்ஷத்திரியன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்.

4-வது, பிராமணம் அல்லது பிராமணன் என்னும் விவேக மிகுத்த வர்களின் பெயர்கள் அன்பின் பெருக்கத்தினாலும் சாந்தரூபத்தினாலும் ஈகையின் குணத்தினாலும் உண்டான பெயர்களாம். அதாவது பாலிமொழியில் சமணாளென்றும் சமஸ்கிருத மொழியில் சிரமணாளென்று வழங்கப் பெற்ற ஞானசாதனர்கள் உபநயனம் என்னும் உதவி விழியாகும் ஞானக்கண் ஆசிரியனால் அளிக்கப்பெற்று இடைவிடா உள் விழிநோக்கத்தால் தன்மன நின்று சின்மாத்திரமடைந்த சாந்தஸ்வரூபிகளை பாலி மொழியில் அறஹத்துக்கள் என்றும், சமஸ்கிருத மொழியில் பிராமணர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள். அதுவுமன்றி தாயுமானவர், ‘வேதமொழி யாதொன்றைப் பற்றுனதுதான் வந்து முற்றுமெனலால் ஜகமீதிருந்தாலும் மரமுண்டென்பது சதாநிஷ்டர் நினைவதில்லை’ என்றார். வேதமொழிகளாகிய, பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்களிருதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மும்மொழியில் யாதொன்றை யேனுமிடைவிடாது பற்றியதுவே முற்றி முத்திக்கு ஆளாவனேல் மரணஜெயம் பெற்று தென்மொழியில் காலகாலன் என்றும் வடமொழியில் பிராமணா எமகாதகாவென்றும், இயமனை ஜெயித்தவன் என்றும் மாளாசிறப்புப் பெயர் பெற்றான்.

- 1:3; சூலை 3, 1907 -


3. வடமொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும்
தென்மொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும், சகல
தேச சகலபாஷைக்காரர்களுக்கும் பொருந்துமென்பது

சூத்திரர் வடமொழி வேளாளர் தென்மொழி

சூத்திரரென்றும், வேளாளரென்றும் வகுக்கப்பட்டத் தொழிற்பெயர்கள் ஐரோப்பியனாயிருக்கினும், அமேரிக்கனாயிருக்கினும், சீனனாயிருக்கினும், பர்மியனாயிருக்கினும், எவனொருவன் பூமியை உழுது பண்படுத்தும் தொழிலையும், தானியங்கள் விருத்தியடையுந் தொழிலையுஞ் செய்வதுடன் கையையுங்காலையும் ஓர் இயந்திரமாகக்கொண்டு பலவகைக் கருவிகளை உண்டு செய்தலும், அக்கருவிகளினால் மரக்கலங்கள் செய்தலும் இரதங்கள் செய்தலும், இருப்புப் பாதைகள் வகுத்தலும், தூரசெய்திகளறிதலும், ஆடைகள் நெய்தலும், ஆபரணங்கள் செய்தலும், பலமதத்தோர் தொழும் சுவாமிகளை சிருஷ்டித்தலுமாகிய உலக சீர்திருத்தத்தொழில்களை விடா முயற்சியால் விருத்திசெய்து சகலருக்கும் உபகாரியாய் விளங்குகின்றானோ அவனையே சூஸ்திரனென்றும் வேளாளனென்றுங் கூறப்படும். இதுவே நம் மூதாதைகள் வகுத்த சிறந்தத் தொழிற்பெயர்கள்.

வைசியர் வடமொழி வணிகர் தென்மொழி

வைசியனென்றும், வணிகனென்றும் வகுக்கப்பட்ட தொழிற்பெயர்கள் ஆசியனாயிருக்கினும். ஆஸ்தரேலியனா யிருக்கினும், இந்தியனாயிருக்கினும், ஈஸ்டின்டியனாயிருக்கினும், எவனொருவன் அரிசிவிற்கினும், ஆட்டுத்தோலை விற்கினும், மாணிக்கம் விற்கினும், மாட்டுத்தோலை விற்கினும், கந்தகஸ்தூரி விற்கினும், கள்விற்கினும், சாந்துசவ்வாதுவிற்கினும், சாராயம் விற்கினும், மிட்டாய் கடைவிற்கினும், மீன் கொணர்ந்து விற்கினும், நவரத்தினங்களிழைத்த நகைகள் விற்கினும், நண்டுகடைவைக்கினும், ஆடையாபரணாதிகள் நிறைந்த அலங்கிருதக்கடை வைக்கினும், ஆட்டிறைச்சி விற்கினும், முத்தாபரணங்களை விற்கினும், மூசுவுருண்டைகடை வைக்கினும், ஆகியச் செயல்களை