பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/601

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 553
 

விருத்தர்களும் பாலராவர் மேனியுஞ்சிவந்திடும்
அருள்தரித்த நாதனாணை அம்மையாணை யுண்மெயே.

ஞானாசிரியரால் அருளப்பெற்ற உபநயனமென்னும் உதவி விழியாகும் ஞானக்கண் பெற்று புருவமத்திய சுழிமுனை நாடியை அழுத்தி சதா விழித்து சருவ பாசபந்தங்களையும் ஒழித்து நனவினில் சுழித்தியாகி தூங்காமல் தூங்குங்கால் தசநாடிகளின் தொழிலொடுங்கி குண்டலி நாடி நிமிர்ந்து தசநாதங்கள் தோன்றி கலங்கச்செய்யும் என்றும்,

தாயுமானவர்

ஆங்கார முள்ளடக்கி / ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமற்றூங்கி / சுகம்பெருவதெக்காலம்.

திரிமந்திரம்

அற்றார் பிறவி யவரிருகண்களை / வைத்தார் புருவத்திடையே நோக்கி
ஒத்தேயிருக்க வுலகெலாந் தெரியும் / எத்தாலுஞ்சாவில்லை இறையாவனாமே.

அகஸ்த்தியர் ஞானம்

விழித்து மிகுபார்த்திடவே பொறிதான்வீசும்
முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழித்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால்
சத்தமென்ற நாதவொலி காதிற் கேழ்க்கும்
இழுத்ததென்று நீகூடத் தொடர்ந்தாயானால்
எண்ணொண்ணா பிறப்பிறப்பு யெய்தும்பார்
அழுத்திமனக் கேசரத்தி னின்று மைந்தா
அப்பனே லலாடத்தில் தாங்குவாயே.

- 2:17: அக்டோபர் 7, 1908 -

பாம்பாட்டி சித்தர்

ஒங்காரக்கம்பத்தின் உச்சிமேலே / உள்ளும் புறம்பையும் அறியவேண்டும் ஆங்காரகோபத்தை யடக்கிவிட்டே / ஆனந்தவெள்ளத்தைத் தாங்கிக்கொண்டே போங்காலஞ்சாங்காலம் ரண்டு மறவே / புருவமைய சுழிமுனைதனிலே
தூங்காமற்றூங்கியே சுகம்பெறவே / தொந்தோம் தொந்தோ மென் றாடாய்பாம்பே.

அகஸ்தியர் பரிபாஷை

அமுதமிழியோகமது செய்யவென்றால்
அப்பனே கால்நீட்டி படுத்துக்கொண்டு
மமதையில்லாவலக்கையை முடி மேல்வைத்து
வழுத்துப்பூரணத்தை சுழிமுனையைமேவி
சமரசமா வாசியை நீ யிழுத்துக் கொண்டு
சமர்த்தாகக் கேசரத்தில் மனதைவைத்தே
அமதியொடு பராபரத்தை தரிசித்தேதான்
அப்பனே லலாடத்தில் தூங்குவாயே.

தாயுமானவர்

தூங்கிவிழித் தென்பைலன் / தூங்காமல் தூங்கினிற்கும்
பாங்குகண்டா லன்றோ / பலன்காண்பேன் பைங்கிளியே.

நனவினில் கழுத்தியாகி நன்மகன் பேறுபெற்றான் என்னும் மனத்தின் கண் சொற்பக் களங்கமேனும் அணுகாவண்ணம் ஜாக்கிரா ஜாக்கிரத்தினின்று சாந்தம், யீகை, அன்பென்னுஞ் செயல்களே பெருகி ஜாக்கிரா சொற்பனத்திலும் அதுவாய் சதா உள்விழியாம் உபநயன பார்வையால் சுழிமுனையை விழித்துநோக்கி ஜாக்கிரா சுழித்தியடைந்தபோது தசநாதங்களும் எழுந்தடங்கி சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான்.

அச்சுயம்பு ஒளியாம் தேயுவின் அகமே இராகத்துவேஷ மோகங்களால் சூடுகொண்டழிப்பது தவிர்ந்து சாந்தம், ஈகை, அன்பென்னும் பெருக்கத்தினால் தேயுவின் அகம் குளிர்ந்து தன்னை உணர்ந்து புளியம்பழம்போலும் ஓடுபோலும் பிரிந்து மனிதனென்னும் பெயரற்று குளிர்ந்த தேய்வகமாம் தெய்வமென்னும் ஏழாவது தோற்றப்பெயர் பெறுகின்றான். பூமியிலிருந்து புற்பூண்டுகள் தோன்றி புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி, புழுக்சீடாதிகளினின்று மட்சம், பட்சிகள் தோன்றி, மட்சம், பட்சிகளினின்று மிருகாதிகள் தோன்றி,