பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/625

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம்/577
 


நாயனார் கூறியுள்ளவாறு துற்கரும் பற்றுகள் யாவையும் அகற்றி நாதன்பற்றி வழிகாட்டிய நற்கரும் பற்றினையே பற்றி நித்திய நிலை அடைய வேண்டியதாகும்.

இத்தகைய நிருவாண சுகமென்னும் நிருவாண சீவனை அடைதற்கு பஞ்சசீலமே முதற்படிகளென்னப்படும்.

சீவகசிந்தாமணி

(பஞ்ச சீலம் பற்றிய ஐந்து பாடல்கள் தெளிவில்லை)

- 2:32: சனவரி 20, 1909 -

பஞ்சசீலமென்னும் பஞ்சபாவங்களை அணுகவிடாமல் காப்பதே
முத்தியென்னும் நித்தியசீவனுக்கு வழியாம்
சீவகசிந்தாமணி

கற்றவைம் பதங்கணீராக் கருவினைக் கழுவப்பட்டு
மற்றவன் றேவனாகி வானிடு சிலையிற்றோன்றி
யிற்றத னுடம்புமின்னா விடரொழித்தினியனாகி
யுற்றவ நிலையுமெல்லா மோதியு முணர்ந்துங்கண்டான்.

இத்தகைய பஞ்சசீல பாக்கியத்தைப் பெற வேண்டுமென்றே மகாஞானிகளாகும் மோசே, தாவீது அவர்கள் கூறியுள்ளதுமன்றி கிறீஸ்துவானவரை ஒரு வழிப்போக்கன் அணுகி போதகரே, நான் நித்தியசீவனை அடையவேண்டுமானால் யாது செய்யவேண்டம் என்று வினவினான். அதற்கு மாறுத்திரமாகக் கிறிஸ்து கற்பனைகளை கைக்கொள்ளுமென்றார்.

கற்பனைகளென்றால் என்னை என்றான். பொய் சொல்லக்கூடாது விபச்சாரஞ் செய்யக்கூடாது கொலை செய்யக்கூடாது களவு செய்யக்கூடாது.

என்று கூறினார். அவற்றை வினவியவன் இக்கட்டளையை என் சிறுவயதிலிருந்துக் கைக் கொண்டு வருகின்றேனென்றான்.

இவனது பொய்மொழியை உணர்ந்தக் கிறீஸ்து நீர் சிறுவயது முதல் கற்பனயைக் கைக் கொண்டு நடத்துவது மெய்யாயின் உனது செல்வங்கள் யாவையும் தாரித்திரர்களுக்கு அளித்துவிட்டு என் பின் சென்றுவா என்று அழைத்தார்.

பொருளாசை மிக்கவனாயிருந்து கற்பனையைக் கைக்கொள்ளுகிறேனென்று பொய் மொழி கூறியவனாதலின் மறுமொழி ஒன்றும் கூறாமல் திரும்பிப்போய்விட்டான்.

இத்தகையப் பொய்யர்களின் மொழியை அறிந்து இரண்டெஜ மானனுக்கு ஒரு ஊழியன் உதவானென்றும் கூறியுள்ளார்.

இதன் கருத்தோ யாதெனில்;- உலகத்தில் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமாக வாழ வேண்டும் என்று ஓர் எஜமானனிடத்திலும் பற்றற்ற நித்திய சீவனை அடையவேண்டும் என்று மற்றோர் எஜமானனிடத்திலும் ஊழியஞ் செய்வதினால் இருவருக்குமுள்ள மாறுபட்டக் கருத்திற்கு இசைந்து ஊழியஞ்செய்து ஒரு எஜமானனுக்கும் தக்க திருப்த்திசெய்து பலனடைய மாட்டான் என்பதாம்.

இதற்குப் பகரமாகவே உலகப்பொருளை நாடி ஊழியஞ்செய்பவன் கற்பனைகளைக் கைக் கொண்டு வருகிறேனென்று பொய்மொழி கூற அதனை விளங்க வரவைத்தபோது புறம்பே ஓடிவிட்டான்.

ஆதலின் நித்தியசீவனை அடையவேண்டி பஞ்சசீலத்தின் வழியாக நடப்பது ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதுபோலும். உலகப்பொருளின் இச்சை மிகுதியால் பஞ்சபாவ வழியாக நடப்பது வழி விசாலமா இருக்கின்ற தென்றும் கூறியுள்ளார்.

நித்தியசீவனாம் முத்தியடைய வேண்டியவர்கள் பஞ்சசீலத்தில் நடந்து பஞ்ச புலன்களை அடக்க வேண்டும் என்பதாம்.

ஆதியங் கடவுளாகக் கொண்டாடும் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி பெருமான் பஞ்சசீல பாதையில் நடந்து ஐயிந்திரியங்களை வென்று இந்திரனென்னும் பெயரும் பெற்று அவருக்குப்பின்பு தெய்வகதி அடைந்த யாவரும் அவரை தேவர்கட்கு அரசன் என்றும், வானவர்கோனென்றும், அண்டர்கோ