பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/633

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம்/585
 

வரங்களையுடையார்களென்றும் 6-வது சருவ சீவர்களையும் ஏவலாளருக்கும் வல்லபமுடையவர்களென்றும், 7-வது சகல ஆலோசனையும் செய்ய வல்லவர்களென்றும்" ஞான வரங்களுக்குரிய அழியாத்திரவியங்களாகும் தேவத்திரவிய உபகாரங்கள் ஏழையும் அளித்துள்ளார்கள்.

தெய்வசபையில் சேர்த்து தேவதிரவியமாம் ஞானத்தைப் பெறச்செய்யும் புருஷனை ஞான தகப்பன் என்றும் இஸ்திரியை ஞானத்தாயென்றும் கூறத்தகும்.

- 2:39; மார்ச் 10, 1909 -

உலகத்தில் யீன்றதாய், அமுதூட்டியதாய் செவிலிதாய், அநாதையை வளர்த்ததாய், ஈன்றதந்தை, அமுதுக் காதரை செய்த தந்தை அநாதையை வளர்த்த தந்தை, கல்வி விருத்திக்கு ஆதரை தந்தை, கல்வியை ஊட்டிய தந்தை ஓர் தலை மகனையேனும் தலைமகளையேனும் புத்த சங்கமாகுந் தெய்வ சபையில் சேர்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து ஞானத்தானம் பெறவைத்து அன்பு பெருகியக்கால், இரசோகுண தமோகுணம் இரண்டும் நசிந்து சாந்தகுண சுயம்புவாய், (அதே சம்மா சம்புவாய்) நல்லவனென கொண்டாடுவதற்காய் உலகத்தில் தோன்றியுள்ள சருவ சீவராசிகளுக்கும் உபகாரியாக விளங்கச் செய்த உபாசகா, உபாசகி, தாயகாநாயகி அதாவது ஞானத்தாய் ஞானத்தகப்பனென விளங்குகின்றவர்களே உலகத்தில் தோன்றியுள்ள மக்களில் மிக்க சிறப்புற்றவர்கள் என்று கூறப்படும்.

புத்த சங்கமாம் தெய்வசபைச் சேர்ந்து சீலமும் ஒழுக்கமும் மிகுத்தக் கொள்கையால் வானம் பெய்யென்றால் பெய்யத்தக்க அதிகாரியாகின்றான். இதை அனுசரித்தே மக்களுக்கு ஞான அமுதூட்டியா ஒளவையும். “நல்லாரொருவ ருளரேலவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யுமழை - என்றும்

புறநானூறு

மலைவான் கொள்கெனவுயர் பலியேற்போர் / மாதிரியான்றுழைமேக்கு யர்கெனக் ம
கடவுட்பேணிய குறவர்மாக்கள் / பெயர்கண் மாரியின் உவகைகண்டாற்று

என்னும் நீதிமான்களின் வாக்கானது மழையை வாவென்றால் வரவும் போவென்றால் போகவும் உள்ளச் செயல்கள் ஞானத்தானம் பெற்றவர்களுக்கேயாம்.

இத்தகைய நீதிமான்களின் செயல்களினால் சருவ சீவர்களுஞ் சுகத்தைப் பெறுகின்றார்கள். ஒழுக்கத்திலும் சீலத்திலும் நடைபெற்றுவரும் சிறுவன் ஒருவனை புத்த சங்கமாம், தெய்வ சபையில் சேர்த்து அவன் ஞான சித்தியடையும் அளவும் வேணவுபகாரஞ் செய்பவனை ஞானத்தகப்பன் என்றும், செய்பவளை ஞானத்தாய் என்றும் சிறப்பித்து வந்தார்கள் நாளது வரையில் பர்ம்மா, தீபேத், முதலிய பௌத்தராட்சியங்களில் சிறப்பித்தும் வருகின்றார்கள்.

அத்தேச பௌத்த சங்கவாசிகள் நாளது வரையில் மழையைப் போவென்றால் போகவும் வா என்றால் வரவும் செய்து வருகின்றார்கள்.

அதுபோலவே பூர்வகால மகாஞானியும் நீதிமானுமாகிய எலியா தீர்க்கத்தெரிசியானவர், மக்களுக்குண்டாயிருந்த அகங்கார மிகுதியையும் வஞ்சகக் கூத்தையும் கண்டு, அவர்கள் செருக்கை அடக்குமாறு மூன்று வருடம் ஆறு மாதம் மழைப் பெய்யாமலிருக்கச் செய்ததும் மறுபடியும் மழையைப் பெய்யும்படிச் செய்ததும் ஆகியச் செயல்களை (யாக்கோபு) எழுதியுள்ள நிருபத்தாலறியலாம்.

பூர்வ இல்லற மக்களுள் இஸ்திரிகளும் சீலநெறி நின்று தங்கட் கணவர்களையே கடவுளாக சிந்தித்து கற்புநிலையினின்று செல்வாக்குடையவர்களாய் வாழ்ந்து வந்தார்கள். அதாவது மழைப் பெய் என்றால் பெய்யும் வாக்கு செல்லக் கூடியவர்களாயிருந்தார்கள்.

திரிக்குறள்

தெய்வந்தொழா அள் கொளு நற்றொழுதெழுவாள் / பெய்யெனப் பெய்யுமழை