பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/650

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
602 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


முன்கலை திவாகரம்

வடநூற்கரசன் றென்றமிழ்க் கவிஞன் / கவியரங்கேற்று முபயக்கவி புலவன்
செயுகுணத்தம்பற் கிழவோன் சேந்த / னறிவுகரியாக தெரிசொற் றிவாகரத்து
முதலாவது தெய்வப்பெயர் தொகுதி.

வீரசோழியம் பாயிரம்

ஆயுங்குணத்தவலோகிதன்பக்கல் அகத்தியன்கேட்
டேயும்புவனிக் கியம்பியதண்ட மிழீங்குரைக்க
நீயுமுளையோவெனிற்கருடன்சென்ற நீள்விசும்பி
லீயும்பரக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே.

தொல்காப்பியம்

மயங்கா மரபி னெழுத்து முறைகாட்டி / மங்குநீர் வரைப்பி னைந்திரர்

சிலப்பதிகாரம்

கண்கவி மயக்கத்துக் காதலோடிருந்த / தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு.

பதஞ்சலியார் ஞானம்

வசனசத்தி சுபிலாதி மாமுனிவர் / மகிதமான ஜனகாதியும்
வாமரோம முனிநந்தி தேவன் வ / பாஷை யோதினர்கள் வண்மெயே
மேருலாவுவட வீதிதோருமுயர் / வேதஞானா ஜனகாதியர்
மேலைவீதிதிரு மூலவர்க்கமிக / வேயிருந்து விளையாடினார்
பாருங்கீழ்திசையி லையர்சட்டமுனி / பானுமாமலையி லாகினார்
பன்னு தென்றிசையி லேயிருந்து தமிழ் / பாஷை யோதினன் அகத்தியன்.

அவற்றை விடாமுயற்சியில் அநுசரித்துவந்த சங்கத்தோர்கள் தென்னிந்திரதேசம், வடயிந்திரதேசமெங்கும் உள்ள சங்கத்தோர்களுக்கு சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் கற்பித்து அவ்விரு பாஷைகளில் திரிபேத வாக்கியங்களாம் திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து உலக மக்கள் கல்விகற்று அறிவின்விருத்தி பெருவதற்காகக் கலைநூற்களை வகுத்தும், மக்கள் ரோகங்களைப் போக்கும் ஓடதிகளின் குணாகுணங்களை அறிந்து பரிகரிப்பதற்கு சரகசூசரகமாம் வைத்திய நூற்களை வரைந்தும், மக்கள் காலமாறுதல்களையும் அதன் குணாகுணங்களையும் அறிந்து பூமிகளை சீர்திருத்திப் பலனடைவதற்கு அந்தந்த சோதிகளின் நிலையங்களையறிந்துக் கொள்ளுவதற்காக சோதிட நூற்களை வரைந்தும் வைத்ததுமன்றி மக்கள் பூமிகளின் குணாகுணங்களை அறிந்து ஆகார சீர்திருத்தங்களையும், தேக போஷணைகளையுங் கண்டறிந்து சுகம்பெருவதற்கு கடற்கரைகளைச் சார்ந்த நிலங்களை நெய்தநிலமென்றும், நாடுகளைச்சார்ந்த நிலங்களை மருத நிலமென்றும், காடுகளைச் சார்ந்த நிலங்களை முல்லைநிலமென்றும், மலைகளைச்சார்ந்த நிலங்களை குறிஞ்சிநிலமென்றும், படுநிலங்களை பாலைநிலங்களென்றும் வகுத்து அந்தந்த நிலங்களில் விளையக்கூடியப் பொருட்கள் இன்னின்னவைகளென்றும், அப்பொருட்கள் இன்னின்னவைகளுக்கு உபயோகமுள்ளதென்றும் விளக்கி ஐந்துவகைபூமிகளின் பலன்களை அடைவோர் ஒருவருக்கொருவர் அவரவர்கள் பூமிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் வசதி சூத்திரங்களையும் கண்டுபிடித்து தங்கட் கைகளையும் கால்களையும் ஓரியந்திர சூத்திரம்போற் கொண்டு தொழில் புரிவோர்களுக்கு வடமொழியில் சூத்திரர் சூஸ்திரரென்று அழைக்கப்பெற்றார்கள்.

இத்தகைய பூமிகளை உழுது பண்படுத்தி தானிய விருத்தி செய்து சருவசீவர்கள் புசிப்புக்கும் வேள்வியின் விருத்திக்கும் ஆதார் பூதமாக விளங்கினோர்கள் தென் மொழியில் வேளாளர்களென்றும் பூவாளர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

இவர்களுள் காடுகளைச் சார்ந்த முல்லை நிலவாசிகள் தங்களால் வளர்க்கப்பட்ட ஆடுமாடுகளினின்று கிடைக்கும் பால், தயிர், நெய், மோரிவைகளைக் கொண்டுபோய் மருதநிலவாசிகளிடம் கொடுத்து தானியம் பெற்றுக்கொள்ளுகிறதும், மருதநிலத்தோர் தங்கள் தானியங்களை கொண்டு போய் முல்லைநிலத்தாருக்குக் கொடுத்து, நெய், தயிர், பால் பெற்றுக்கொள்ளுகிறதுமாகிய ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்றுக்கொள்ளுவோருக்கு