பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/656

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது610 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

போதிக்குங்காலமும், சாதன ஒழுங்கும் ஒரேவகையிலிருக்கவேண்டுமன்று போதித்து ஒவ்வோர் சங்கத்தினர்கள் படித்த சாங்கியத்தையும் ஒரேவழியில் நடாத்தும்படியாகப் போதித்தக் காலக்குறிப்பு மாறாது கபில முநிவரது சாங்கிய சமயமெனக் கொண்டாடி வந்தார்கள்.

அங்கபார முநிவர் காலக் குறிப்பைக் காட்டும் நொய்யாயிகம் அல்லது நையாயிக சமயமாவது யாதெனில்; நொய்யாம் அணுத்திரளாயிருந்த காலத்தாலும் இகமாம் பூமி அழிந்ததில்லையாகும். அணுத்திரள் யாவுந் திரண்டு அண்டம் போன்ற பூமியாகி அழியாதிருக்கின்றதென்பதும் அவ்வழியா நிலைகண்டு பூமிக்கு நிலமென்னும் பெயரளித்துள்ளதும் ஆகிய இகத்தில் வாழ்வோர்களாகிய நாமும் நையாது நித்தியநிலைப் பெறுவதற்காக இல்லந் துறப்பதே சிறப்பென்று கூறி இகத்தில் நையாயிதத்தை விளக்கியது கண்டு அங்கபாத முநிவர் காலக்குறிப்பு மாறாது நையாயிக சமயமென்று கொண்டாடி வந்தார்கள்.

கணாதமுநிவர் காலத்தில் தோன்றிய வைசேஷக சமயமாவது யாதெனில், கணாத முநிவர் கருணைகூர்ந்து சகலருக்கும் சங்க அறன் சத்தியபோதத்தை விளக்கிவருங்கால் இல்லறதன்மமும், துறவற தன்மமும் வையகத்தில் விசேஷமுற்றிருப்பினும் பொதுவாக சேஷித்துள்ளது சத்தியதன்மமே யாதலின் உலக மாக்கள் ஒவ்வொருவரும் வையகத்திற் கெடாது சேஷித்துள்ள சத்தியதன்மத்தில் நடந்து சதானந்தத்தைப் பெறவேண்டுமென்று கூறிவந்த கணாதமுநிவரின் காலக்குறிப்பு மாறாது வைசேடிக சமயமெனக் கொண்டாடிவந்தார்கள்.

சைமினி முநிவர் காலத்தில் தோன்றிய மீமாம்ஸ சமயமாவது யாதெனில், சைமினிமுநிவர் உலகமக்கள் மீது கருணை கூர்ந்து சத்தியதன்மத்தை விளக்கிவருங்கால் சிறந்த பிறப்பும், சிறந்த ஞானமும், சிறந்த அன்பும், சிறந்த சாந்தமும், சிறந்த செயலும், சிறந்தவுருவும். சிறந்த வாக்கும், சிறந்த போதனையுமமர்ந்த மகா அம்ஸ வுருவாம் புத்தபிரானுக்கு மீ, மேற்பட்டவர்கள் உலகத்தில் ஒருவருமில்லையாதலின் அவரது சத்தியதன்மபோதத்தில் ஒன்றைக் கூட்டவாவது குறைக்கவாவது கூடாதென்று அறவாழியான் மீ, மகா அம்சத்தை விளக்கிய சைமினிமுநிவர் காலக்குறிப்புமாறாது பகவன் மீமாம்ஸ சமயமெனக் கொண்டாடிவந்தார்கள்.

இத்தகைய ஆறு சமண முநிவர்களால் அறுவகை சமயபேதங் களுண்டாயினும் அறுசமயங்களுக்கும் ஆதார தன்மகாயமாம் புத்தரும், அவரது தன்மமும், அவரது சங்கமுமட்டும் பேதப்படாது அறுசமயத்தோர்க்கும் உபாசகர்கள் உண்டி அளித்து உதவிபுரிந்து வந்தார்கள். இவ்வாறு சமய விவரங்களை அருங்கலைச் செப்பு, அறுசமயப்பத்திலும், பெருந்திரட்டிலும் தெளிவாகக் காணலாம்.

இத்தகைய பௌத்தசங்கத்தோர்களாலும், பௌத்ததன்ம அரசர்களாலும், மற்றும் உபாசகர்களாலும் சீவராசிகளின் விருத்திகளையும், மநுமக்களின் சுகங்களையும் மேலாகக் கருதி சிறுபிள்ளைகளின் கல்வி விருத்திக்கு அறப்பள்ளிகளில் கூட்டங்களையும், பிணியாளர்களை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலைகளையும், ஒருசங்கத்தைவிட்டு மறு சங்கத்திற்குச் செல்லும் சமணமுநிவர்களுக்கும், சகல ஏழைகளுக்கும் அன்னதன்மசாலைகளையும், திக்கற்ற அனாதை குழந்தைகளுக்கு அமுத தன்ம சாலைகளையும் வகுத்து ஒருவருக்கு ஓர் ஆபத்து நேருங்கால் மற்றவர்கள் கூடி அத்துன்பத்தை நீக்குதலும், ஒருவருக்கோர் துன்பமுண்டாயின் மற்றவர்கள்கூடி அத்துன்பத்தை நீக்குதலுமாகியச் செயலால் சகலபாஷை மக்களும் பாஷை பேதமாயினும் தன்மத்தில் பேதமின்றி தன்னைப்போல் பிறரையும் நேசித்து ஒற்றுமெய் மிகுதியாலும், அன்பின் பெருக்கத்தாலும், திராவிடராஜன்மகளை சிங்களராஜன் விவாகம்புரிவதும், வங்காளராஜன் மகளை மராஷ்டகராஜன் விவாகம் புரிவதுமாகிய வொற்றுமெய் நயத்தைக் காணுங் குடிகளும் அரசர்கள் எவ்வழியோ குடிகளும் அவ்வழியெனக்கொண்டு தேச சிறப்பும், குடிகளின்