பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/686

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
638 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

மண்டபத்திலிருந்து புருசீகர்கள் யாவரும் திடுக்கிட்டெழுந்து போய் விட்டார்கள்.

அஸ்வகோஷர் நந்தனென்னும் அரசனைநோக்கி அரசே இந்த வேஷப்பிராமணர்களாம் பொய்க்குருக்கள் தங்கள் பத்து பேர் சீவனத்திற்கு பத்தாயிரம் பொன் விலைப்பெற்ற வியாரங்கள் அழிந்தாலும் அவர்களுக்கு தாட்சண்யங் கிடையாது. தங்கள் பத்துபேர் சீவனத்திற்காக பதினையாயிரம் பொன் விலைப்பெற்ற சாஸ்திரங்கள் அழியினும் அவர்களுக்கு ஞானமிராது.

இத்தகைய ஞானமற்றவர்களும், நாண மற்றவர்களும் ஒழுக்கமற்றவர்களுமாகிய இக்கூட்டத்தோரென்று சொல்லுங்கால் வெளியிற் சென்ற புருசீகர்கள் யாவரும் வந்து சபையில் உட்கார்ந்தார்கள். அஸ்வகோஷர் அவர்களை சுட்டிக்காட்டி தங்களுடைய நாட்டிற்கு வடமேற்கே புருசீக நாடென்னும் ஒன்றுண்டு. அவ்விடத்தியப் பெண்கள் சூதக்காலங்களில் ஏழுநாள்வரை வெளியிற் கிடப்பார்கள். துடையினின்று கால்தெரியாது செட்டையணைந்திருப்பார்கள். புருஷர்களும் சிரசில் நீண்ட குல்லாசாற்றி பெரும்வேட்டி சுற்றிக் கொள்ளுவார்கள். அக்கினியை தெய்வமாகத் தொழுவார்கள். அக்கூட்டத்தோர்களே இவர்களாயினும் அப்பெண்கள் இவ்விடம் கால்செட்டை அணையாமல் இவ்விடத்திய சேலையைக் கொண்டே கீழ்ப்பாச்சிக் கட்டிக்கொள்ளுகின்றார்கள். அவ்விடம் அக்கினியைத் தொழுத போதினும் இவ்விடம் அக்கினிகுண்டத்தைக் கையுடன் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

அக்கினியைத் தொழுதுவருஞ் செயலால் சீவகாருண்யமற்று உயிருடன் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளை அக்கினியிலிட்டுச் சுட்டுத் தின்பதுடன் புருஷனற்ற விதவைகளையும் அவ்வக்கினியிற்போட்டுக் கொன்று வருகின்றார்கள்.

காரணங் கேட்டோமாயின் அவள் விதவையாகிவிட்டபடியால் அக்கினியாய தேவனிடம் ஒப்படைத்துவிட்டோமென்று கூறுவதுடன் அக்கினி அவியாதிருக்குமாறு சகல சுகதுக்க காரியாதிகளிலும் அக்கினியை வளர்த்துக் கொண்டே வருகின்றார்களென்று சொல்லிவரும்போது அரசன் திடுக்கிட்டெழுந்து, அஸ்வகோஷரை வணங்கி, யோகேந்திரா இவர்கள் நம்முடைய தேசத்தாரன்று. புருசீக தேசத்தோரென்பதும் சிலாலயங்களென்பதை சிவாலயங்களென்றதும், புலாலை யந்தரங்கத்தில் புசித்தலும், இஸ்திரீகளை அக்கினிக்கு இரையாக்குதலுமாகியச் செயல்களை விளக்க வேண்டுமென்று வணங்கினான். அவற்றை வினவிய அஸ்வகோஷர் அரசனைநோக்கி, நந்தா, எனக்கு காலதாமதமானாலுமாகட்டும் நீர் கேட்குஞ் சங்கைகளை நிவர்த்திச் செய்ய வேண்டியது முக்கியக் கடனாதலின் தெரிவிக்கின்றோமென்று கூறி இப்பிராமணவேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரன்று. புருசீக நாட்டாரென்று அறிந்துகொள்ள வேண்டுமாயின் உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்குத் திக்கிலுள்ள புருசீகநாட்டிற்கும் இருபத்தியேழுநாட் பிரயாணமிருக்கின்றது. அவ்விடஞ்சென்று இவர்களுடைய தேகநிறங்களையும், அவர்களுடைய தேகநிறங்களையும், இவர்களுடைய குணக்குறிகளையும், அவர்களுடைய குணக்குறிகளையும், இவர்களது சுராபான புலால் பேருண்டிகளையும், அவர்களது சுராபான புலாலின் பேருண்டிகளையும், இவர்களுடையப் பெண்களின் நாணமற்றச் செயலையும், அவர்களின் தந்திரோபாயங்களையும், இவர்கள் தங்களவர்களைமட்டும் பாதுகாத்துவருஞ் செயலையும், அவ்விடமுள்ளவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்குமட்டிலும் உபகாரஞ்செய்துக் கொண்டு ஏனையோர்களைக் கருணையின்றி விரட்டுங் கூற்றையும், இவர்களுடைய பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது, பெயரிட்டழைக்கும் சப்தங்களையும், அவ்விடத்தியப் பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது பெயரிட்டழைக்கும் உல்லாசங்களையும், இவர்களுடைய பெண்கள் ருது சூதகங் கண்டதுமுதல் எழுநாள் வரை வெளியிற் கிடப்பதும், அவ்விடத்தியப் பெண்கள் சூதகங்கண்ட ஏழுநாள் வெளியிற் கிடப்பதும், அந்தரங்கத்தில்