பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/689

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 641
 


காமியமுற்ற சிற்றரசர்கள் முன்னிலையிலும் மற்றுங் கல்வியற்றக்குடிகள் முன்னியிலும் ஆரியக்கூத்தாடி காரியத்தின் பேரில் கண்ணோக்கம் உடையவர்களாயுமுள்ள மிலேச்சர்களின் வெண்தேகமும் நாகரீக உடையும் சகடபாஷா சுலோகங்களும் இத்தேசத்தோரை மயக்கி அவர்கள் சீவனோபாயத்திற்காகப் பொய்யைச்சொல்லி வஞ்சித்து பொருள்பறிக்கும் வழிகள் யாவையும் இத்தேசக் குடிகள் மெய்யென நம்பி மோசம் போய் விட்டார்கள். அவர்களுள் பெளத்ததன்ம போதங்களும் அவைகளின் செயல்களும் வியாரங்களில் தங்கியுள்ள ஞானகுருக்களாம் சமணமுநிவர்களுக்கும், கன்ம குருக்களாம் சாக்கையர்களுக்கும் விளங்குமேயன்றி வேறொருவருக்கும் அதனந்தரார்த்தம் விளங்கவேமாட்டாது.

அவ்வகை விளங்காக் குடிகள் யாவரும் இம்மிலேச்சர்களின் பொய்ப்போதகங்களுக்குட்பட்டு வருகின்றார்கள். மற்றும் இவ்வாரியக் கூத்தரின் பொய்ப்போதகங்களையும் இம்மிலேச்சர்களின் நாணாவொழுக்கங்களையும் விளக்கி அறிவுறுத்திவந்த பெளத்தசங்கத்தோர்களுக்கும் வேஷப் பிராமணர்களாம் பொய்க் குருக்களுக்கும் மாளாவிரோதம் பெருகி புருசீகர்களைக்காணும் இடங்களிலெல்லாம் பௌத்தர்களைத் துரத்தவும், பௌத்தர்களைக் கண்டவுடன் ஓடுவதும் வழக்கமாயிருந்தது. பௌத்தர்கள் புருசீகர்களை அடித்துத் துரத்துவதும் அவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய் போதகங்களையும் விளக்கும்படியானவர்களாய் இருக்கின்றார்களன்றி புருசீகர்களைக் கெடுக்காமலும் துன்புற்றுந் துன்பப்படுத்தாமலும் புத்திப்புகட்டி வருகின்றார்கள்.

ஆரியர்களாம் மிலேச்சர்களோவெனில் தங்கள் வசப்பட்டுள்ள சிற்றரசர்களைக்கொண்டு சமணமுனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கழுவிலுங் கற்காணங்களிலுமிட்டு வதைக்கத்தக்க ஏதுக்களைத்தேடி அறப்பள்ளிகளை விட்டகற்றியும் தன்மநூற்களைக் கொளுத்தியும் சத்திய சங்கத்தையும், சத்தியதன்மத்தையும் பாழ்படுத்திவந்ததன்றி இத்தேயத்தோர் வழங்கிவந்த தொழிற்பெயர்களில் சிலதை சாதிப்பெயர்களாக மாற்றி அதிற்றங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென ஏற்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குட்படாது பராயர்களாயிருந்தவர்களும் தங்கள் பொய்க்குருக்கள் வேஷங்களையும் தங்கள் பொய்ப்போதகங்களையும் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பறைந்துவந்த பௌத்த விவேகிகளைத் தாழ்ந்தசாதி, பராயர்கள், பறைபவர்களென்று கூறி தற்காலம் பறையர், பறையரென வழங்கி, பௌத்தர்களைக் கண்டவுடன் அவர்களது அடிக்கும் உதைக்கும் பயந்தோடும் புருசீகர்களை அவர்களைச் சார்ந்தக் குடிகள் ஏன் ஓடுகின்றீர்களென்று கேட்பார்களாயின் அடிக்கு பயந்தோடுவதைச் சொல்லாமல் அவர்கள் தாழ்ந்த சாதி பறையர்கள், அவர்கள் எங்களைத் தீண்டலாகாது, நாங்களவர்களைத் தீண்டலாகாதென்றும் பெரும் பொய்யைச்சொல்லி, பௌத்தர்களைப் பாழ்படுத்தி அவர்களது சத்திய தன்மங்களையும் மாறுபடுத்திக் கொண்டுவருகின்றார்கள். அதாவது புத்தபிரானால் ஆதியிற் போதிக்கப்பட்ட திரிபீடங்களாம் முதநூலுக்கு வழிநூற்களும் சார்புநூற்களும் இயற்றினவர்கள், பிரிதிவு, அப்பு, தேயு, வாயுவென்னும் நான்கு பூதங்களே முக்கியமானவைகள் என்றும், வெளியவை நான்கு பூதங்களுந் தோற்றுதற்கிடமென்றும், அப்பூதங்களுக்கு வடமொழியில் பிரிதிவு - பிரம மென்றும், தென்மொழியில் நிலம், மண், பூமி - என்றும் வடமொழியில் வாயு மயேசம் என்றும் தென்மொழியில் காற்று, மாயுலவி என்றும் வடமொழியில் ஆகாயம், சதாசிவமென்றும், தென்மொழியில் வெளி, மன்றுள் என்றும் பெயர்களைக் கொடுத்துள்ளது மன்றி தோன்றும் பொருட்களின் தோற்றத்திற்கு எக்காலுமுள்ளது பூமியாதலின் அவற்றுள்தாழ்ந்திருக்கும் நிலையை கீழ் அக்கு, கிழக்கென்றும், உயர்ந்து நிற்கும் நிலையை மேல் அக்கு, மேற்க்கென்றும், கண்ணுக்கு எட்டியவரையில் போய் பார்க்கக்கூடிய நிலையை தென் அக்கு தெற்க்கு என்றும் கண்ணுக்கு