பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/699

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 651
 

தேசங்களது பூமிகளிற் புதைத்து அங்கங்கு ஏழு இந்திர வியாரங்களாம் அறப்பள்ளிகளைக் கட்டிவிட்டதுமன்றி சிறந்த தேகசாம்பலாதலின் தேகத்தை தகனஞ்செய்த சாம்பலின்மீதும் ஓர்க் கட்டிடங்கட்டி அதற்கு மகாபூதி என்னும் பெயரை அளித்ததுமன்றி வங்கவரசன் எடுத்துச்சென்ற அஸ்தியை அவனது பூமியிற் புதைத்து தங்கள் குரு நாதனஸ்தியாதலின் அன்றுமுதல் அத்தேசத்திற்கு அஸ்திநாதபுறமென்றும் ஆனந்தசிந்தனை செய்துவருகின்றார்கள்.

சங்கங்களிலிருந்த சமணமுநிவர்கள் அச்சாம்பலை வாரிக்கொண்டுபோய் தங்கடங்கள்வியாரங்களில் வைத்து அதன்மீதுசெட்டுகளைப் பரப்பி தங்கள் ஞானசாதனங்களை சாதித்துவந்தார்கள். மற்றுமுள்ள கோபாலர்களாம் அரசபுத்திரர்கள் குருவைச் சுட்டு கோபாலர் பெட்டியில் வைத்துள்ளாரென்று கூறுமாறு அரசபுத்திரர்களும் அவரது குடும்பத்தோரும் அன்பார்ந்த குல குருவை ஆனந்தமாக சிந்திக்குமாறு காலைக்கடன் முடிந்து சுத்தமானவுடன் பேழையிலுள்ள மகாபூதியாம் சாம்பலைக் கையிலேந்தி நெற்றியில் மூன்று பிறிவாய் கோடுகளிழுத்து புத்த, தன்ம, சங்கமென்னும் முத்திர மணியை சிந்தித்து வந்தார்கள்.

மற்றுமுள்ள குடும்பத்தோர் அவரது ஏக சிரமுடியாம் சடைமுடியைக் கத்திரித்து பொன்னினாலும், வெள்ளியினாலுங் கூடுகள் செய்து அதிலடக்கி கழுத்திலணைந்து இதயத்திலிடைவிடா சிந்தனை சீலத்தினின்றார்கள்.

இத்தகைய மகாபூதியென்னும் சிறந்த சாம்பலிருக்குமளவும் மகாபூதியென வழங்கிவந்தவர்கள் அவை முடிந்தபின்னர் சிலர் விட்டு விட்டார்கள். சிலர் எங்குங் கிடைக்ககூடிய சாணச்சாம்பலை விபூதியென்றேற்று பூர்வ சிந்தனையிலிருந்தார்கள். இவைகளை நாளுக்கு நாளுணர்ந்து வந்த சிவாச்சாரி என்பவர் தங்கள் கூட்டத்தோர் சம்மதத்தால் சிவமத மென்னுமொன்றை ஸ்தாபித்தார்.

அத்தகைய சிவமதமென்னும் நூதனத் தொழுகையை ஆரம்பித்தவர்கள் தங்களிஷ்டம்போல் சகலத்தையும் நூதனமாகச் செய்துவிட்டால் பௌத்தர்கள் யாவரும் அவற்றை நம்பமாட்டார்களென்றெண்ணி பௌத்தர்களுக்குள் புத்தபிரானை சிந்தித்துவந்தச் செயல்களைக்கொண்டும் அவருக்களித்துள்ள வெவ்வேறுப் பெயர்களைக்கொண்டும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.

அஃதெவ்வாறென்னில் புத்தபிரான் புலியால் பிடிபட்ட மானைக்கார்த்து புலிக்கு சாந்தங்கூறி விடுத்தவுடன் புலி காட்டுக்குள் செல்லவும் மானானது மாதவனைப் பின்பற்றியதுகண்டும் கம்மாளனது உலக்கணத்தில் உருகிய மழுவை கரத்திலேந்திய காரணங்கண்டும் அவரை மான்மழுவேந்தியென வழங்கி வந்தார்கள். அப்பெயரையே சிவாச்சாரி தாமேற்படுத்திக்கொண்ட சிவனென்னும் பெயருக்களித்துக்கொண்டார்.

புத்தபிரான் சதுரகிரியென்னும் ஓர் மலையில் குடிகளை வருவித்து அன்பைப்பற்றியும் ஒழுக்கத்தைப்பற்றியும் பிரசங்கித்துவருங்கால் சகல சீவர்களின் உள்ளங்களும் உருகி சத்தியதன்மத்தில் லயித்தது, பகவன் பாதப்படி அழுந்தியிருந்தக்கல்லும் உருகி அவரது கமலபாதம் அழுந்தியதாக சரித்திரம். அக்காலத்தில் உச்சிபொழுதேறி சூரியனது வெப்பத்தால் தாகவிடாயதிகரித்து மலையில் நீரின்றி சீவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்த பகவான் தனது ஏகசடையை உதறி நீட்டியவுடன் கங்கையாம் புனல் புரண்டோடி சகல சீவர்களின் தாகவிடாயைத் தீர்த்து தணியச்செய்து அரித்துவாரம் நுழைந்து பகவனது சடாபார கங்கை நதியென்னும் பெயரும் பெற்று கங்கைக்காதாரனென்றும் அவரையழைத்து வந்தார்கள்.

சிவாச்சாரிக்கு கங்காதர னென்னும் பெயர் மட்டுந் தெரியுமேயன்றி அதன் சரித்திரங்களறியாராதலின் தாங்களேற்படுத்திக்கொண்ட சிவனது சிரச்சடையில் கங்கையென்னும் ஓர் பெண்ணை வைத்துக்கொண்டிருக் கின்றாரென்றும், தனது துடையின்மீது ஓர் பெண்ணை உழ்க்காரவைத்திருக் கின்றாரென்றும் சர்பங்கள் புத்தபிரான் தாளிலும் தோளிலும் ஏறிவிளையாடிக் கொண்டிருந்த அன்பின் பெருக்க சரித்திரமறியாது தங்களது சிவன் சர்பங்களை