பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/704

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
656 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

அரண்மனையிலிருக்கும் போதும் நாராயணாநம, நாராயணநமவென்று சொல்லிக்கொண்டேயிருப்பாயாயின் உன் தகப்பனும் மற்றுமுள்ளோரும் அஃதென்னை என்று கேட்பார்கள் அவர்தான் எங்களுடைய தேவன், அவர்தான் எல்லோரையுங் கார்ப்பவரென்று கூறுவாயாயின் அரசனும் மற்றுமுள்ளோரும் சந்தோஷப்பட்டு உன்னை மெச்சிக்கொள்ளுவார்களென உற்சாகப்படுத்தி விட்டார்கள். பிரபவகாதனும் யாதொன்றுமறியா சிறியனாதலின் அம்மொழியை மெய்யென நம்பி அரண்மனையில் விளையாடும் வேளையிலும், அறப்பள்ளியில் கல்விகற்கும் வேளையிலும், சயனிக்கும் வேளையிலும் நாராயணநமா, நாராயணநமா என்னும் மொழியையே ஓர் விளையாட்டாக உச்சரித்திருந்தான்.

அம்மொழியை அறப்பள்ளியில் வசிக்கும் சமண முநிவர்கள் அறிந்து பிரபவகாதனை அருகிலழைத்து, அப்பா நீரென்ன சொல்லுகிறீரென்றார்கள். அவன் யாதொன்றும் வேறு மறுமொழி கூறாது நாராயணநம, நாராயணநமவென சொல்லிக் கொண்டே ஓடிவிட்டான். அறியா சிறுவனும் அரசபுத்திரனும் ஆதலின் அவனை ஒன்றுங் கவனிக்காமல் மகட பாஷையில் (நரோவா) நரோயண்யோ வென்னு மொழிக்கு நீர் என்னும் பொருளுள்ளபடியால் நீரே நமவென்று சிறுவன் கூறுமொழி யாதும் விளங்கவில்லை. அதையே ஓர் விளையாட்டாக சொல்லித் திரிகின்றான். கேட்கினும் மறுமொழி கூறுவதைக் காணோம். அம்மொழி விளையாட்டே அவன் சட்டமெழுதுவதையும், பாட்டோலையையுங் கெடுத்துவருகின்றது. அரசன் கேட்பாராயின் ஆயாசமடைவார். ஓலைச் சுருள் விடுக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள்.

இச்சங்கதிகள் யாவையும் அறிந்த ஆரிய வேஷப்பிராமணர்கள் பிரபவநாதனை அழைத்து உம்மெ யாவர் கேட்கினும் பதில் கூறவேண்டாம் அரசன் கேழ்ப்பாரேயானால் நாராயணன்தான் சகலரையுங் காப்பவர் ஆதலால் நாராயணநம வென்று சொல்லுகிறேனெனத் திடம்படக் கூறுவீராயின், உமது தந்தையும் மற்றுமுள்ளோரும் ஆனந்திப்பதுடன் உமது விவேகத்தைப் பற்றியும் மிக்கக் கொண்டாடுவார்கள். அங்ஙனம் அவர்கள் ஆனந்தங்கொள்ளாது சீற்றமுடையவர்களாகி நாராயணன் என்றாலென்ன, அவன் எங்கிருக்கின்றான், அவன் எத்தேசத்தான், என்னிறத்தான், என்னபாடையானென விசாரிப்பார்களாயின், அவற்றை மாலை அந்திநேரத்தில் காண்பிக்கின்றேன், தந்தையாகிய நீவிர்தவிர மற்றவர் யாரும் இங்கிருக்கப்படாதென்று தெரிவித்து அவ்விடம் நடந்த வர்த்தமானங்களை எங்களுக்கும் அறிவித்துவிடுவீராயின், நாராயணனை கொலுமண்டபத்திலுள்ள ஓர் தூணினின்று வரச்செய்து தமக்கும் தமது தந்தைக்கும் தரிசனங்கொடுக்கச் செய்கின்றோம், தாங்கள் யாதொன்றுக்கும் பயப்படாது நாராயணன் எங்கிருக்கின்றானெனக் கேட்குங்கால், இதோ தூணிலுமிருக்கின்றான் துரும்பிலுமிருக்கின்றானெனப் பெருங்ககூச்சலிடுவீராயின், உடனே நாராயணன் தரிசனம் ஈவாரென்று சொல்லி பிரபாவகாதனை அனுப்பிவிட்டு அந்திபொழுதாகி ஆள்முகம் ஒருவருக்கொருவர் தெரியாது மறைவுண்டாம் நேரங்கண்டு வேவுகர்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு யாருமறியாது அரண்மனைக்குள் பிரவேசித்துத் தூண்களின் மறைவில் மறைந்திருந்தான்.

பொழுது அஸ்தமிக்குங்கால் புத்திரன் பள்ளியிலிருந்து வந்தவுடன் சமணமுநிவர் அளித்திருந்த ஓர் ஓலைச்சுருளை தந்தையிடங் கொடுத்து நாராயணநம என்றான். அம்மொழியைக் கேட்டு ஓலைச்சுருளைக் கண்ட அரயனுக்கு ஓர்வகை ஆயாசமுங் கோபமும் பிறந்து, அடா பிரபவகாதா, நமது வம்மிஷவரிசையில் தாய்தந்தையரை தெய்வமெனக் கொண்டாடும் பாலபருவத்தில் இரண்யகசிபநமாவென்று சொல்லவேண்டியதிருக்க ஐலத்தை நோக்கி நாராயண நமவென்று கூறுவதை யோசிக்கில் பிரபவளு புரட்டாசிமீ பிற்பூரணை பிற்பகலில் பிறந்தவன் பிதாவிற்கே சத்துருவாவான் என்னுங் கணிதப்படி உனது பிறவியின் காலதோஷம் தந்தையை மறந்து தண்ணீரை சிந்திக்குங் காலமாச்சு போலுமென்று துக்கித்து, உங்கள் நாராயணன்