பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/717

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம்/689
 


இவற்றுள் பண்டி என்பதை வண்டி என்றும், பரதன் என்பதை வரதன் என்றும், பைராக்கி என்பதை வைராக்கி என்றும், பாணம் என்பதை வாணம் என்றும் பாலவயது என்பதை வாலவயது என்றும் வழங்கிவருவதுபோல் திரிபேதவாக்கியங்களென்பதை திரிவேத வாக்கியங்களென சிலகால் வழங்கி வீடுபேறாம் ஒரு மொழியையுஞ் சேர்த்து நான்கு பேதவாக்கியங்களென்றும், நான்கு வேதவாக்கியங்களென்றும் வழங்கி வந்தார்கள். இதன் பேரானந்த அந்தரார்த்தமும். ஞானரகசியார்த்தமும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணமென்னும் பாகைப்பொருளின் பகுப்பும், இவ்வேஷப்பிராமணர்கள் அறியாது தங்கள் தங்கள் மனம்போனவாறு அக்கினியைத் தெய்வமெனத் தொழும் புருசீகர்களின் சரிதைகளிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் பௌத்தர்களாம் இந்தியர்களின் சரித்திரங்களிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும், இருக்கு, யசுர், சாம, அதர்வண, சாகை பாகங்களாம் நான்குபேதமொழிகளை நான்கு வாக்கியங் களென்று உணராமலும், அந்நான்கு வாக்கியங்கள் விளக்கமின்றி மறை பொருளாயுள்ளதுகண்டு ஒவ்வொரு மொழியின் உட்பொருளை தெள்ளற விளக்குமாறு வேதமொழிகளின் உபநிட்சயார்த்தமென்னும் உபநிடதமென வரைந்துள்ள அந்தரார்த்தத்தை அறியாமலும் வேதமென்னு மொழியை பெரியக் கட்டுபுத்தகமென்று எண்ணி முதல் வேதத்திலுள்ளது புத்தகங்கள் பத்தென்றும், காண்டங்கள் இருபது என்றும் வாக்கியங்கள் ஆராயிரத்துப் பதினைந்தென்றும் அநுவாகங்கள் நூத்தியெட்டென்றும், சூக்தங்கள் எழுநூற்றி அறுபதுக்கு மேற்பட்டதென்றும், பிரபாதங்கொண்டது நார்ப்பதென்றும் முதல்வேதமென்பதுள் வரைந்துள்ளது போலவே மற்ற மூன்று வேதமென்பதையும் பெருங் கட்டுகளாக வரைந்துவிட்டார்கள்.

இவ்வகை வரைந்துள்ள வேதங்களை கடவுள் பிரம்மாவுக்குப் போதித்தாரென்றும், பிரம்மா முனிவர்களுக்குப் போதித்தாரென்றும் ஓர்புறங் காணலாம். சிற்சில அரசர்களே வேதங்கள் எழுதினார்களென்பதை மற்றோர் புறங் காணலாம். பிரஜாபதியாலும், சந்திரனாலும் அக்கினியாலும் வேதங்கள் எழுதப்பட்டதென்பதை இன்னோர்புறத்திற் காணலாம். அதர்வணன்பிள்ளை எழுதினான் தேவர்கள் எல்லோரும் எழுதினார்களென்பதை வேறோர்புறத்திற் காணலாம். இவ்வகை மாறுதலாக இன்னார்தான் அப்பெருங்கட்டாகிய வேதத்தை எழுதியவர்களென்பது புலப்படாமலிருப்பதற்குக் காரணம் அவர்கள் மனம்போனவாறு பலரும் எழுதி பல துரைகளிடம் வேதம், வேதமென வரைந்துக்கொண்டுபோய்க் கொடுத்துள்ளதாயின் அவர்கள் வேதத்தின் ஆக்கியோன் இன்னானேயென்று ரூபிக்கப்பாங்கில்லாமல் போய்விட்டது.

இவ்வேதத்தின் ஆக்கியோன் இல்லாத படியால்தான் அசுரன்திருடி கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளித்துவைத்த வேதத்தை இன்னொரு கடவுள் அதிப் பிரயாசையுடன் மச்சாவதாரமெடுத்து சமுத்திரத்திற் சென்று கொண்டு வந்திருக்கின்றார். ஆக்கியோன் ஒருவரிருந்திருப்பாராயின் உடனுக்குடன் வேறொரு வேதக்கட்டை எழுதிக்கொடுத்துவிட்டிருப்பார். மட்சாவதாரம் வேண்டியிருக்காது. அசுரனுடன் போர்புரியும் அவசரமுமிராது.

அவ்வேதத்துள் எழுதிவைத்துள்ள சங்கதி யாவும் அக்கினியையே தெய்வமாகத் தொழுஉங் கூட்டத்தோர் சங்கதிகளும் புத்ததன்மத்தைச்சார்ந்த சங்கதிகளுமே மலிவுறக் காணலாமன்றி மற்றவை ஒன்றுங் கிடையா.

அவ்வேதத்துள் புத்ததன்ம சரித்திரங்களிலுள்ளப் பெயர்களும் ஞானங்களும் அடங்கியிருந்த போதினும் அதன் தன் பொருட்களையும் செயல்களையும் உணராமலே வரைந்து வைத்துவிட்டார்கள்.

இவ்வேதத்துக்கு உரியவர்கள் இத்தேசத்தவர்களாயிராது அன்னிய தேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறி தங்கள் தங்கள் சுயப் பிரயோசனத்திற்காய்ப் புத்ததன்ம அறஹத்துக்களைப்போல் பிராமண வேஷம் அணிந்துக் கல்வியற்றக் குடிகளை வஞ்சித்து வந்தபோதிலும், புத்த தன்மத்தைச் சார்ந்த சிரமணர்கள் செயல் யாது, சிரமணர்கள் மகத்துவமென்னை , பிராமணர்கள் மகத்துவமென்னை என்றுணராமலே வேஷத்தைப் பெருக்கி