பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/732

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
684 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


ஆதலின் அரசனும் அரசன் மனையுமாகும் கோவில் இல்லாவூரில் குடியிருக்கவேண்டாமென்று கூறியிருக்கின்றார்கள். இத்தகைய அரசருள் தன்சாதியோர் புறசாதியோரென்னும் பேதமின்றியும் ஏழைகள் கனவான்களென்னும் தாட்சண்ணியமின்றியும், தன்மதம் பிறர்மதமென்னும் பற்றன்றியும், நீதிநெறி வழுவாது பாதுகாத்து சுகசீரளிக்கும் செவ்வியக்கோலாம் செங்கோல் நடாத்தும் அரசனையே அடுத்து வாழ்வதழகாகும். அங்ஙமின்றி தன்சாதி பெரிது புறசாதிசிறிதென்னும் பேதா பேத சாதிகர்வமும் தானே கனவான் மற்றவர்கள் ஏழையென்னும் மதோன்மத்த தனகர்வமும், தன்மதம் பெரிது ஏனையோர் மதம் சிறிதென்னும் மதோன்மத்த மதகர்வமுடையவனாய் கொடிய கோலென்னும் கொடுங்கோலரசுபுரிவோனை அண்டிவாழ்தலினும் கொடிய மிருகங்கள் வாசங்செய்யுங் காடுகளில் வாழ்தலே மிக்க மேலாயதாகும்.

தற்காலம் இவ்விந்தியதேசத்தில் சாதி பேதமில்லாது வாழ்ந்தவர்கள் சாதி ஒன்றை நூதனமாக ஏற்படுத்திக்கொண்டவுடன் சாதி கர்வத்தையும் மதபேதமில்லாமல் வாழ்ந்து வந்தவர்கள் நூதனமாகிய மதங்களை ஏற்படுத்திக்கொண்டவுடன் மதகர்வத்தையும், வித்தையறியாத வீணர்களாய்த் திரிந்து நூதனமாக சொற்ப வித்தைகளைக்கற்றுக்கொண்டவுடன் வித்தியா கர்வத்தையும், என்றும் பணம் படைத்தறியாது நூதனமாக சொற்ப பணம் படைப்போரெல்லாம் தனகர்வத்தை யுங்கொண்டு ஒற்றுமெயற்று பாழடைந்து போகின்றார்கள். இத்தகைய பேதமுற்றக் கூட்டத்தோரை ஆண்டு ரட்சிக்க வேண்டிய அரசர்கள் தன்சாதி புறசாதியென்னும் பேதம்பாரா சாதிகர்வமற்றவர்களும் தன்மதம் புறமதமென்னும் பேதம்பாரா மதகர்வமற்றவர்களும் தன்வித்தை மேலானது பிறர்வித்தைத் தாழ்வானதென்னும் பேதம் பாரா வித்தியாகர்வ மற்றவர்களும் தாங்கள் கனவான்கள் மற்றவர்கள் ஏழையென்னும் தனகர்வ மற்றவர்களும் ஆகியோர்களே இத்தேசத்திற்கு அரசர்களாக நிலைக்க வேண்டுமென்பதே சாதிபேதமற்ற இத்தேசப் பூர்வக்குடிகளின் சம்மதமாகும். அவர்கள் எண்ணப்படி பூர்வபுண்ணிய வசத்தால் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமின்றி செங்கோலோச்சும் ஆங்கில அரசாட்சியே தோன்றி நிற்கின்றது. அவர்களாட்சியே நீடிநிலைத்து சகலசாதியோரையும் சகல மதத்தோரையும் சகல பாஷையோரையும் தங்களோர் குடைக்கீழ் கார்த்து ரட்சிக்கவேண்டி நிற்கின்றார்கள்.

- 4:8; ஆகஸ்டு 3, 1910 -


26. கூட்டத்தால் தேட்டமும் வாட்டமும் உண்டாம்

தற்காலத்தில் நமது தேசத்தோர் சிற்சிலக்கூட்டங்கள் கூடுவதியல்பாம். அக்கூட்டங்களிற் சிலர் எங்கள் பிரமம் அரசனாகப் பிறந்து அழிக்குந்தொழில் நடாத்துகிறதென்றால் தேட்டம். சிலர் அங்ஙனமில்லை எங்கள் பிரமம் பன்றியாகப் பிறந்து மலத்தைத் தின்பதென்றால் வாட்டம். மற்றுஞ்சிலர் எங்கள் பெரியோர் நால்வர், அவர்கள் மேலோகத்திற்குப்போய் கீழ்லோகத்திற்கு வருகிறவர்கள், கீழ்லோகத்தினின்று மேலோகத்திற்குப் போகின்றவர்கள் என்னில் மிகுதேட்டம். சிலர் அடடா, மேலோகத்தினின்று கீழ்லோகத்திற்கு வந்தவர்களைக் கண்டவர்கள் யார் கீழ்லோகத்தினின்று மேலோகத்திற்குப் போனவர்களைக் கண்டவர்கள் யாரென்றால் வெகு வாட்டம். சிலர் எங்கள் தேவனை நம்பினால்தான் மோட்சம்பெருவீர்கள், எங்கள் தேவனை நம்பாதவர்கள் நரகத்தில் வாதனைப்படுவீர்களென்றால் தேட்டம், அதிற் சிலர் மோட்சம் எங்குளது, நரகம் எங்குளது மோட்சம் பெறுவான் என்பதின் முன்னடையாளமும் குணக்குறிகளும் என்ன, நரகத்திற் சேருவானென்னும் முன்னடையாளமும் குணக்குறிகளுமென்ன. உன் தேவனென்பதற்கு உனக்குள்ள சுயாதீனப்பட்டயமென்னவென்று கேட்டால் வாட்டம். இத்தகையத் தேட்டங்களும் வாட்டங்களும் உண்டாகக்கூடியக் கூட்டங்கள் கூடி போட்டியிட்டு கைகளை நீட்டிவிட்டுப் பேசுவதால் யாதுபயன். மதச்சண்டைக் கூட்டங்களால் மாளா துக்கமும் சமயச்சண்டைக் கூட்டங்களால் சால