பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/771

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் /723
 

வதைத்து தின்று வந்தவற்றை சமண முநிவர்களும் பௌத்தக்குடிகளும் ஆபாசமுற்று கண்டித்தும் துரத்தியும் வந்தகாலத்தில் நூதன வேஷ சாதியோர் மித்திரபேதத்தாலும் வஞ்சினத்தாலும் பொறாமெயாலும் அக்காலத்திருந்த சிற்றரசர்களையும் பெருந்தொகைக் குடிகளைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு சமணமுனிவர்களையும் அவரவர்கள் வீற்றிருந்தக் கட்டிடங்களையும் அழித்து வந்ததுடன் பெரும்பாலும் அவற்றுள் அடக்கி வைத்திருந்த சுவடிகளையே கொளுத்தி நாசஞ்செய்து விட்டார்கள். எதுக்கெனில் அச்சுவடிகள் யாவும் இருக்குமாயின் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சாதி வேஷங்களுக்கும் நூதனப் பொய் மதங்களும் நூதனப் பொய்வேதங்களும் நூதனப் பொய் சாஸ்திரங்களும் நூதனப் பொய்ப்புராணங்களும் பிரபலப்படாமற் போமென்று எண்ணி கண்ணிற் காணுஞ்சுவடிகள் யாவையும் நெருப்பிலிட்டு நாசஞ் செய்ததன்றி இவர்கள் பொய்வேஷங்களுக்கு யெதிரடையாயிருந்த பௌத்தக் குடிகள் யாவரையும் தாழ்ந்த சாதியோரென வகுத்து பலவகையாயத் துன்பங்களைச் செய்து தேசம் விட்டு தேசந் துரத்தியபோதினும் தங்கள் தங்கள் கையிருப்பிலிருந்த நீதி நூற்கள், ஞான நூற்கள், வைத்திய நூற்கள், சோதிடநூற்கள்யாவுமே தற்காலம் அச்சுக்கு வெளிவந்து பூர்வ வைத்தியத்தில் அரைக்கால் பாகம் தாழ்ந்த சாதியோரென்று வகுக்கப்பட்டக் கூட்டத்தோர்களாலேயே பரவி வருகின்றதன்றி பூர்வ நூற்களையும் அவர்களே அச்சிட்டு வெளிக்குங் கொண்டு வந்திருக்கின்றார்கள். அவற்றுள் எனது பாட்டனார் ஜர்ஜ் ஆரங்டியன் துரை பட்ளர் கந்தப்பனென்பவர் ஓலைப்பிரிதியிலிருந்து திரிக்குறளையும், நாலடி நாநூறையும் ஈஸ்ட் இன்டியன் கம்பனியார் காலத்தில் தமிழ்ச்சங்கங் கூட்டிவைத்த கனம் எலீஸ் துரையவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வெளி வந்திருக்கின்றது. போகர் எழுநூறு, அகஸ்தியர் சிமிட்டு, ரத்தினச் சுருக்கம் புலிபாணி வைத்தியம் ஐந்நூறு, அகஸ்தியர் பரிபாஷை ஐந்நூறு, பாலவர் கீடம் மற்றும் நூற்களை எமது தமிழாசியர் தேனாம்பேட்டை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதரவர்களால் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார். இச்சென்னையில் பர்ஸூவேலையர் தமிழ்ப் பத்திரிகை வெளியிடுவதற்குமுன் புதுப்பேட்டையில் “சூரியோதயப்பத்திரிகை” யென வெளியிட்டுவந்த திருவேங்கட சுவாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும் ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்நூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார்.

- 7:38; பிப்ரவரி 25, 1914 -

சென்னையில் அத்வைத பக்த சமாஜமென்னும் ஓர் சங்கத்தை நாட்டி சித்தர்கள் மகத்துவங்களையும் ஞானத்தின் தெளிவையுந் தெள்ளற விளக்கிவந்த உவேம்புலி பண்டிதரவர்களால் சித்தராரூடம், வைசூரிநூல், ஜீவாஜீவ குணவிளக்கமென்னும் மூலிகைகளின் பயனையும் விளக்கி அச்சிட்டு வெளிபடுத்தியிருக்கின்றார் உயர்ந்த சாதியென்னும் வேஷமிட்டுக்கொண்டு தாழ்ந்த சாதியொரென்று குறிப்பிட்டு தலையெடுக்காமல் நசிந்துவருங் கூட்டத்தோர்களே பூர்வ வைத்திய நூற்களை அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்ததுமன்றி வைத்திய பாகங்களையும் அவர்களே கையாடி வந்தார்கள். நாளது வரையிலுங் கையாடி வருகின்றார்கள். இத்தகைய பூர்வவைத்திய பாகத்தை கையாடிவந்தபோதினும் அவை சிறப்பிக்காமலும் விருத்தியடையாமலும் போயதேயன்றி வேறில்லை. அதன் காரணமோ வென்னில் வைத்திய விவேகக் கூட்டத்தோர் யாவரையுந் தாழ்ந்த சாதியோரென்றுந் தீண்டப்படாதவர்களென்றும் வஞ்ச நெஞ்சினர் வதைத்து வந்ததினால் அவர்கள் வைத்தியங்கள் சிறப்படையவும் விருத்தி பெறவும் வழியுண்டா என்பதை விவேகிகளே தெளிந்துக்கொள்ளுவார்கள். ஈதன்றி உயர்ந்த சாதியென்னும் வேஷமிட்டுள்ளோர் அநுபவத்திலுங் காட்சியிலும் இவ்வகையாக வைத்தியத்தை சித்திபெற விடாமற் செய்து வந்தபோதிலும் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ளுவதற்கும் சுயப்பிரயோசனத்திற்கும் மநுதர்ம சாஸ்திரமென்னும் ஓர் நூலையும் ஏற்படுத்திக் கொண்டு அதனுள் பயிரிடுந்