சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 75
105. வேண்டி வினைசெயேல்.
வினை - குறித்த தொழிலை ஒருவன் செய்து வருகின்றனென்றறிந்தும், வேண்டி - அத்தொழில் நீயும் விரும்பி, செயேல் - செய்யாதே யென்பதாம்.
அதாவது ஒருவன் ஒரு தொழிலை நடத்தி வருகின்ரு னென்றறிந்திருந்தும் அதை நாடுவதாயின் எதிரியைக் கெடுப்பதற்கு யேதுவென்றுணர்ந்த ஞானத்தாய் வேண்டி வினைசெயேலென்று கூறியுள்ளாள்.
106. வைகரைத் துயிலெழு.
வைகரை - சூரிய வுதய காலத்தில், துயில் - நித்திரையை விட்டு, எழு - நீ எழுந்திரு மென்பதாம்.
வைகரை விழிப்பே சூர்யகலை, சத்திரகலைக் காதார மாதலின் சூரியன் கரைகட்டுக்கு விழிக்கவேண்டுமென்று
கூறியுள்ளாள்.
107. ஒன்ைைரச் சேரேல்.
ஒன்னரை - பகைவர்களாகுஞ் சத்துருக்களை, சேரேல் - நெருங்காதே என்பதாம்.
அடுத்துக் கெடுப்பது பகைவர் சுவாப மாதமலின் அவர்களை நெருங்கலாகாதென்பது கருத்து.
108. ஒரஞ் சொல்லேல்.
ஒரம் - ஒருவர் சார்பாய் சார்ந்துகொண்டு மற்ருெரு வர்க்குத் தீங்குண்டாகத்தக்க வார்த்தையை, சொல்லேல் - எக்காலுஞ் சொல்லாதே என்பதாம்.
எக்காலும் நடுநிலையினின்று சகல கார்யாதிகளிலும் பேச வேண்டுமென்பது கருத்தாம்.
ஒளவையார், அம்மன் என்னும் பெயர்பெற்ற ஞானத்தா யருளிய முதல் வாசகம். .
முற்றிற்று.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.pdf/82
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
