பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று தாழ்த்தப்பட்ட மக்களாய் ஒடுக்கிவைக்கப் பட்டுள்ள மக்கள் கொண்டிருக்கும் செறிந்த அறிவுப் பாரம் பர்யத்துக்கான சிறந்த சான்றாக விளங்குகிறார் அயோத்தி தாஸர். இத்தனை காலமும் வெளிச்சத்துக்கு வராமல் புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டிருந்த அயோத்திதாஸரின் சிந்தனைகளைத் தமிழுலகுக்கு மீட்டுத்தரும் பணியினை மேற்கொண்டுள்ள தலித் சாகித்ய அகாடமியின் இந்த வெளியீடு பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுமென்பது உறுதி. எங்களுக்குக் கிடைத்தது மூல நூலின் இரண்டாவது பதிப்பு ஆகும். முதல் பதிப்பு வெளியான ஆண்டு விவரம் தெரிய வில்லை. இரண்டாம் பதிப்பின் மூலத்தில் உள்ளது போன்றே பத்தி பிரிக்கப்பட்டு, எழுத்துக்களும் அதில் உள்ள படிக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் பண்டிதரின் தமிழன் வார இதழில் புத்தகம் 4 இலக்கம் 19இல் தொடங்கி, புத்தகம் 5 இலக்கம் 33 வரையில் தொடராக வெளியாகியுள்ளது. தொடருக்கும், நூலாக வந்ததிற்குமிடையே பத்தி பிரிப்பதிலும், சில சொற்களிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த நூலின் மூலப்படி யைத் தமது நூலகத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தாருக்கும் (French Institute of Pondicherry) அதில் பணியாற்றும் திரு. கண்ணன். எம் அவர்களுக்கும், மெய்ப்புத்திருத்தியதில் உதவிய கு.மு. ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இந்த விளைச்சலின் பலன் வெகுமக்களுக்கு உரித்தாகட்டும். டிசம்பர் 1999 - தலித் சாகித்ய அகாடமி சென்னை-73