பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 0.3 படி நடத்தி வருவீர்களானல் நீங்களெல்லோரும் சுகசீவிகளாக வாழ்விர்களென்று சொன்ன வார்த்தையைக் கேட்டவுடன் மலையனுரானுக்கானந்தம் பிறந்து அரசனிடம் வியாபாரத்தாய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வந்த நமக்கு அரசாட்சியும், அரண்மனையுங் கிடைப்பதோர் வியாபார யோகமென்றெண்ணி தாங்கள் கூறியபடி நாளை யுதயத்தில் நாங்கள் வருகின்ருேமென்று கூறி யனுப்பிவிட்டார்கள். புருசிகர்கள் யாவரும் சோலையை விட்டகன்று அரண் மனச்சேர்ந்து அரசனை யணுகி அரசே நமது மனைக்கு வட மேற்கேயுள்ள மாஞ்சோலையில் பெருத்தக் கூட்டமாக சில வன்னிய தேசத்தோர் வந்திரங்கி யிருக்கின்ருர்கள். அவர்களுடைய நோக்கம் ஒரு வகையில் வியாபாரக் கிருத்தியாக வும் மறுவகையில் யுத்தசன்னதராகவும் காண்பதையறிந்து யாங்கள் அவர்களை நெருங்கி அந்தரங்கச் செயலறிந்து வந்திருக்கின்ருேம். அதாவது யுத்தத்தில் வல்ல தேகிகளும் யுக்த்தியில் பேரறிவாளரும், பக்த்தியில் பரம தியானிகளுமா யிருக்கின் றபடியால் நீங்களவர்களை எதிர்த்துப் போர்புரிவதை நிறுத்தித் தங்கள் அரண்மனை முகவாயலில் தங்கப்பாத்திரத்தில் நீரும் தங்க வட்டிலில் புஷ்பமும் துளசியுங் கொண்டுபோய் வைத்துவிட்டு சூரியன் மறைந்தவுடன் குடும்பத்தோரையும் காலாட்படைகள் யாவரையு மழைத்துக்கொண்டு தங்கள் தமயனிடம் போயிருப்பீரால்ை நாளை யுதயமவர்கள் யுத்தத்திற்கு வந்து அரண்மனை முகவாயலிலுள்ள புஷ்பம், துளசி நீளிவற்றைக் கண்டவுட னடங்கித் தங்கள் சுயதேசந் திரும்பிப் போய்விடு வார்கள். உடனே தாங்கள் வந்து தேசத்தை யாண்டுகொள்ளலா மென்று கூறிய வஞ்சகர்களின் மித்திர பேத வார்த்தைகளை அரசன் மெய்யென நம்பி தங்கப் பாத்திரங்களில் புட்பமும் நீருங் கொண்டு வைத்துவிட்டு குடும்பத்தோர் யாவரையு மழைத்துக் கொண்டு காலாட்படையினதரவால் வாணுேரெளவினரண் மனையைச் சேர்ந்துவிட்டான். மலையனுாரானென்னும் வியாபாரியோ உதய மெழுந்து தன் கூட்டத்தோர் யாவரையும் யுத்தத்திற்குச் செல்லுவதுபோல்