பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.4 க. அயோத்திதாஸப் பண்டி தர் திட்டப்படுத்திக்கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்ற போது தங்களை யெதிர்ப்போர் ஒருவரு மில்லையென்னு மானந்தத்தால் மனையைக் கைப்பற்றிக்கொண்டார்கள். புருசிகர் முன்பிருந்த வரசனின் சொத்துக்கள் யாவையும் அபகரித்துக்கொண்டதுடன் வாயற்படி யில் வைத்துள்ள தங்கப்பாத்திரங்களையு மெடுத்துக்கொண்டு தங்களில் லங்களில் சேர்த்துக்கொண்டதுடன் மலையனுாரான ஒர் பிண்டமாகப் பிடித்துவைத்துவிட்டு இராஜாங்க சகல காரியாதிகளையுந் தாங்களே நடாத்திவந்தார்கள். இத்தியாதி சங்கதிகளையுங் கண்ணுற்ற மராஷ்டக வேஷப்பிராமணர்கள் தங்களுக் கேதேனுங் கெடுதி உண்டாகு மென்றெண்ணி அவர்களும் விலகிவிட்டார்கள். மராஷ்டக வரசனும், மராஷ்டகக் குடிகளும், மராஷ்டகக் காலாட்படைகளும், மராஷ்டக வேஷ பிராமணர்களும் அவ்விடம்விட் டகன்றவுடன் மிலேச்சர்களாம் ஆரிய வேஷப் பிராமணர்களுக்கு ஆனந்தம் பிறந்து பெளத்தர்களால் அவரவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறு சகட பாஷையில் பிராமணன், கூடித்திரியன், வைசியன், சூஸ்திரனென்றும் திராவிட பாஷையில் அந்தணன், அரசன், வணிகன், வேளாளனென்றும் வகுத்திருந்த தொழிற்பெயர்களை கீழ்ச்சாதி, மேற்சாதியென வழங்கச்செய்து தங்களை சகலருக்கும் உயர்ந்தசாதி பிராமணர் களென சொல்லிக்கொண்டு அறப்பள்ளிகளையும், விவேக மிகுத்த சமணமுநிவர்களையும் அழித்துப் பாழ்படுத்தத்தக்க யேதுக்களைச் செய்துவந்ததுமன்றி அறப்பள்ளிகளில் சமண முநிவர்களால் பெரும்பாலும் வந்த சகட பாஷை யின் சப்தம் நாளுக்குநாள் குறைந்து திராவிட பாஷை விருத்தியாகிவிட்ட படி யால் கன்னடம், மராஷ்டக முதலிய பாஷையில் பிராமனன், கூடித்திரியன், வைசியன், சூத்திரனென்னும் சாதிப்பெயர்களை வகுப்பதற்கு யேதுவில்லாமல் மராஷ்டக பாஷையிலுள்ள சில வல்ல மெயுற்ருேரை கூடித்திரியராகவும், மிலேச்சர்களாகிய தங்களை பிராமணர்களாகவு மேற்படுத்திக்கொண்டு திராவிட பாஷையில் மருத நிலமாகும் பள்ளியப்பதிகளை யாண்டு வந்த சிற்றரசர்கள் சமண முநிவர்ககையேற்று இவ்வேஷப்