பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 Ꮾ க. அயோத்திதாளப் பண்டிதர் சேர்த்துவரும்படி பயமுறுத்தியதுமன்றி கல்வியைக் கற்கவிடா மலும், சமணமுநிவர்களிருப்பிடங்களுக்குச் செல்விடாமலுமே மிக்கத் துன்பப்படுத்தி வந்தார்கள். வட யிந்திரதேச வங்கபாஷைக்காரருள் அறப் பள்ளி களில் தங்கியிருந்த சமண முநிவர்கள் ஒதல், ஒதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றலென்னும் அறுவகைத் தொழிற்களே யாதொரு குறைவு மின்றி சரிவர நடாத்தி வந்தபடியால் அரயனும் உபாசகர்களும் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சிறப்பைக்கண்டு பாலி மொழியிற் சண்ணுளர் சண்ணுளரென சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறந்த கூட் டத்தோர் மத்தியில் மிலேச்ச வேஷப்பிராமணர்கள் சென்று தங்கட் பொய் வேஷங்களையும், பொய்ப் போதங்களையும் மெய்போல் விளக்கியும் அவர்கள் நம் பாது பாசகர்களைக்கொண்டு வேஷப்பிரமணர்களை யணுகவிடாது துரத்தி வந்ததினால் அங்குள்ள கல்வியற்ற குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் நாளுக்கு நாள் வசப்படுத்திக்கொண்டு தங்களது பொய்யை மெய்யென நம்புதற்காய வேதுக்களைக் செய்துக்கொண்டு முநிவருள் சண் ஆளராக விளங்கினேரைக் கண்டவுடன் ஒடுவதும், ஒளிவதும் வேஷப் பிராமணர்களது வேலையாயிருந்தது. அவற்றைக் கானுந் தங்களைச்சார்ந்த கல்வியற்றக் குடிகள் வேஷப் பிராமணர்களே நோக்கி அறப் பள்ளியிலுள்ள சமன முநிவர்களாம் சண் ஆளர்களைக் கண்டவுடன் ஒடி வொளிக் கின்றீர்களே அதன் காரணம் யாதென்று கேட்பார்களாயின் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சண் ஆளரென்னும் சிறந்த பெயரை சண்டாளர் சண்டாளரென்னும் இழிபெயரென மாற்றி அவர்கள் மிக்க தாழ்ந்த வகுப்போர் அவர்களை நெருங்கப்படாது, தீண்டப்படாதென்று கூறி தாங்கள் வழங்கிக்கொண்டே நாடோடிகளாகத் திரிந்ததுமன்றி தங்களைச் சார்ந்தவர்கள் நாவிலும் சண் ஆளரை சண்டாளர் சண்டாளரென விழிவுபடக் கூறி முநிவர்களின் சிறப்பைக் கெடுத்துக்கொண்டே வருவது மன்றி அவர்களது அறப் பள்ளிகளிலுந் தீயிட்டு நீதி நுாற்களையும், ஞான நூற்களையும் பாழ்படுத்தி அவர்களது சீரையும் சிறப்பையுங்