பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 0.7 கெடுத்துக்கொண்டே வருகின்ருர்கள். யீதன்றி வடமேற்கு தேயத்தில் திராவிட பாஷையை கொடு ந்தமிழென்றும், செந்தமிழென்றும் வழங்கியவற்றுள் கொடுந்தமிழ் வழங்கும் மலையாளு வாசிகள் முதனுால் ஆராய்ச்சியில் மிக்க சிறந்தவர்களும், அகிம் சாதன் மத்தில் பசுவினது பாலைக்கறப்பினும் அதனது கன்றினை வதைத்ததற் கொப்புமென் றெண்ணி பால், நெய் முதலியதைக் கருதாது தெங்குபால், தெங்கு நெய்யையே புசிப்பிக்கும் மேற்பூச்சுக்கும் உபயோகித்துக்கொண்டு கொல்லா விரதத்திலும், சத்திய சீலத்திலும், அன்பின் ஒழுக்கத்திலுமே நிலைத்திருந்தார்கள். அத்தகைய மேன்மக்கள் மத்தியில் ஆரியர்களாம் வேவுப் பிராமணர்கள் சென்று பேதை மக்களை வஞ்சித்து கல்வியற்றக் குடிகளை யடுத்து தாங்களே யதார்த்த பிராமணர் களென்றும், தங்களுடைய சொற்களுக்குக் குடி கள் மீறி நடக்கப்படாதென்றும் பயமுறுத்தி பிராமணனென்னும் பெயர் வாய்த்தோன் செய்யத்தகாத வக்கிரமச்செயல்கள் யாவையுஞ் செய்து உத்தம ஸ்திரிகளை விபச்சாரிகளாக்கி அவர்களது நல்லொழுக்கங்கள் யாவையுங் கெடுத்து வருவதை மலையாள வாசிகளாம் கொடுந்தமிழ் விவேகிகளறிந்து சத்தியதன்மத்தைக் கெடுக்கும் அசத்தியர்களாம் மிலேச்ச வேஷப்பிராமனர்களை அடித்துத் துரத்தி தங்கள் தேயத்தை விட்டு அப்புறப்படுத்தும் யேதுவையே பெரிதென்றெண்ணி அவர்களைத் தலைக்காட்ட விடாது துரத்தி சத்தியதன்மத்தை நிலைநிறுத்தி வந்தார்கள். வேஷப் பிராமணர்களாய மிலேச்சர்களோ ஆரியக் கூத்தாடினுங் காரியத்தின்மீது கண்னென்னும் நோக்க மாருது தாங்களனுபவித்துவந்த சுகபுசிப்பும், சுகபோகமும் அவ்விடம் விட்டேகவிடாது சுழண்டுகொண்டே திரிந்து அத்தேய சிற்றரசர்களையும் பேரரசர்களையும் தங்களது வயப்படுத்திக் கொள்ளத்தக்க முயற்சியிலிருந்து அரயர்கள் வயப்பட்டவுடன் தங்களை யடித்துத் துறத்தி தங்களது பொய் ப் பிராமண வேஷங்களையும், பொய்ப்போத கோஷங்களையும் பலருக்கும் பறைந்து பதிவிட்டகலச்செய்துவந்தப் பேரறிவாளராம் பெளத்த வுபாசகர்களைத் தீயர்களென்றும் மிலேச்ச வஞ்சநெஞ்ச மிகுத்தக் கொடும் பாபிகளாகியத் தங்களை நியாயரென்று மேற்படுத்திக்