பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I I I புத்தபிரான் சதுரகிரி யென்னும் ஒர் மலையில் குடிகளை வருவித்து அன்பைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் பிரசங்கித்து வருங்கால் சகல சீவர்களின் உள்ளங்களும் உறுகி சத்தியதன் மத்தில் லயித்தது. பகவன் பாதப்படி யழுந்தியிருந்தக் கல்லும் உறுகி அவரது கமலபாதம் அழுத்தியதாக சரித்திரம். அக்காலத் தில் உச்சி பொழுதேறி சூரியனது வெப்பத்தால் சீவர் விடா யதிகரித்து மலையில் நீரின்றி சீவர்கள் படுங் கஷ்டத்தை யுணர்ந்த பகவன் தனது ஏக சடையை வுதரி நீட்டியவுடன் கங்கையாம் புனல் புரண் டோடி சனங்களின் தாகவிடாயைத் தீர்த்துவிடும்படிச்செய்து அரித்துவார நுழைந்து பகவனது சடாபார கங்கைநதியென்னும் பெயரும் பெற்று கங்கைக்காதார னென்றும் அவரை யழைத்துவந்தார்கள். சிவாச்சாரிக்கு கங்காதரனென்னும் பெயர்மட்டு ந் தெரியுமேயன்றி அதன் சரித்திரங்களறியாராதலின் தாங்களேற் படுத்திக்கொண்ட சிவனது சிரச்சடையில் கங்கையென்னும் ஒர் பெண்ணை வைத்துக்கொண்டிருக்கின்ரு ரென்றும், தனது துடையின் மீது ஒர் பெண்ணை உட்கார வைத்திருக்கின்ரு ரென்றும் சர்பங்கள் புத்தபிரான் தாளிலும் தோளிலும் ஏறி விளையாடிக்கொண்டிருந்தவன் பின்பெருக்க சரித்திர மறியாது தங்களது சிவன் சர்பங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்தா ரென்றும், பெளத்த வுபாசகர்களும், சாக்கை யர்களும் சித்தார்த் தரது மாபூதியென்னும் சாம்பலை புத்த, தன்ம, சங்கமென்னும் மூன்று பிரிவாக நெற்றியில் பூசுவதுடன் அவரை தகனஞ்செய்த மிகுதியாய சந்தனக்கட்டைகளில் ஒவ்வொன்றைக் கொண்டு போ யிழைத்து பொட்டிட்டு அறவாழியான சிந்தித்துவந்த அன்பினிலையை சிவாச்சாரியா ரறியாராயினும் வெறுமனே கிடைக்கும் சாணச் சாம்பலை விபரீதப்பொருளெனப் பகட்டி தங்களை யடுத்தவர்களைப் பூசிக்கச்செய்வதுடன் அதற்கோர் தீட்சையுண்டு, அதை நீங்கள் பெற்றுக்கொண்டபோதுதான் விபூதி அணியலாகும். மற்றப்படி யணிவது பெருந் தோஷ மெனக் கூறி அதற்காயப் பொருள் பரித்துகொண்டு நெற்றியி லிடும் சாம்பலுக்கு நேர்ந்த கதைகளெல்லாங் கற்பித்து வந்ததுடன் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் உலகவிவகாரங்களற்று தன்னை யறியுங்காலமே காலமென கூறு