பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 C க. அயோத்திதாளலப் பண்டிதர் மொழிக்கு பாலிபாஷையாம் மகடபாஷையில் சைவசமயமே சமயமென சிறப்பித்துக் கூறுமொழியின் அந்தரார்த்தத்தை சிவாச்சாரியறியாது தங்களை சிறப்பித்து சுகசிவனஞ் செய்து கொள்ளுமாறு சிவமதத்தோ ரென்பதுடன் தங்களை சைவ சமயத் தோர் சைவ சமயத்தோரென்றுங் கூறற்குத் தலைப்பட்டார். பெளத்தர்களுக்குள் புத்தரை யென்றுமழியா பதுமநிதி யென்றும், அவரது தன் மத்தை யென்று மழியா தன் மநிதி யென்றும், அவரது சங்கத்தை யென்றுமழியா சங்கநிதியென்றும் வழங்கிவந்து அவைகளெக்காலும் தங்கள் சிந்தையில் நிலைப் பதற்காக அரசமரக்கரையில் சிறு மணிகள் செய்து துவார மிட்டுக் கயிற்றில் கோர்த்து வைத்துக்கொண்டு வொழிந்த நேரங்களில் புத்த, தன் ம, சங்கமென உருட்டி வருவது வழக்கமாகும். அம்மணிக்கு தன்மகாயத்தை சிந்திக்கும் மணியென்றும், உருதிரட்டு மணியென்றும் உருதிரட்டுங் கட்டையென்றும் வழங்கி வந்தார்கள். சிவாச்சாரியாரோ, அம்மணிக்கு மாறுதலாக பேரிலந்தைக் கொட்டைகளைக் கொண்டு வந்து உருதிரட்டு மணியென்னும் பெயரை மாற்றி உருதிராட்ச மணியென வழுங்கும்படிச் செய்துகொண்டார். பெளத்தர்கள் மணியைக்கொண்டு உருபோட்டு சிந்திப்பதற்கோர் உபாயஞ் செய்துக்கொண்டிருக்க அதன் கருத்தறியா சிவாச்சாரியார் உரு திரட்டுங் கொட்டையாலேயே தங்களுக்குந் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அனந்த சுகங்களுண்டெனக் கூறி சிலாரு பங்களாலும், கொட்டை களாலும், சாணச்சாம்பலாலும் மக்களுக்கு சுகமுண்டென்னும் சோம்பலையும், மதி மயக்கையும் உண்டு செய்துவிட்டார். ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் செயல்களைக் கண்டு வரும் திராவிட வேஷப்பிராமணர்கள் பெளத்தர்களால் வழங்கிவரும் தேக தத்துவப் போதங்களைக் கேட்டி ருந்தவர் களாதலின் அதே பாகமாக சிலாலயங்களைக் கட்ட வாரம்பித்துக் கொண்டார்கள். அதாவது ஒவ்வோர் மனுக்களின் தேகத்துள்ளும் அடிவயிற்றிற்குங் கீழும், மூலத்திற்கும் உள்ளது மண்ணினது