பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 -4 க. அயோத்திதாஸ்ப் பண்டி தர் பெருங் கூட்டத்தோர் திராவிட வேஷ பிராமணர்களின் சிவாலயங்களுக்குப் போகும்படி யாரம்பித்துக்கொண்டார்கள். அதல்ை ஆரிய வேஷப்பிராமணர்கள் பொருள் வரவு குன்றி கஷ்டமுண்டாயதால் அவர்கள் கூட்டத்தோர் யாவரும் ஒன்று கூடி நாம் ஒரேயிடங்களில் சிலாலயங்களைக் கட்டி சீவிப்பதால் கஷ்டமேயுண்டாகும். ஊர்வூராக சுற்றி பொருள் சம்பாதித்து வந்து வோரிடந்தங்கி சுகம் அனுபவிக்க வேண்டுமென்னும் ஒர் ஆலோசினையை முடிவு செய்துக் கொண்டு பெளத்தர்களுக்குள் புத்தபிரானுக்குரியப் பெயர் களில் எப்பெயரை முக்கியங் கொண்டாடுகின்ருர்கள் அவரை எவ்வகையாக முக்கியம் சிந்திக்கின்ருர்களென் ருலோசித்து சுருக்கத் தெரிந்துகொண்டார்கள். அதாவது புத்தபிரான் சருவ சங்கங்களுக்கும் அறத்தைப் போதித்து வந்தபடி யால் அவரை சங்க அறரென்றும் சங்க தருமரென்றும், சங்க மித்திரரென்றும் வழங்கி வந்தது மன்றி அவர் எண்ணருஞ் சக்கரவாளமெங்கணும் அறக்கதிர் விரித்து வந்த படி யால் ஜகத்குரு வென்றும் ஜகன்னென்றுங் கொண்டாடி வந்தார்கள். இதனைத் தெரிந்துகொண்ட ஆரிய வேஷப் பிராமணர்கள் தங்களுக்குள் நல்ல ரூ பமுடையவன கவும், ஆந்திரம், கன்னடா, மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு பாஷைகளிற் சிலது பேசக்கூடியவனுகவும், கோகரணங் கஜகரணங் கற்றவனாகவும் உள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு அவனுக்கு வேஷ்ட்டி அங்கவஸ்திரம் முதலாயதும் பட்டினல் தரித்து காசிமாலை, முத்துமாலை முதலியதணிந்து தலையில் நீண்ட குல்லா சாற்றி, ஒர் வினுேதமான பல்லக்கிலேற்றி சில யானைகளின்பேரிலும் ஒட்டகங்களின் பேரிலும் தங்கள் புசிப்புகளுக்கு வேண்டிய தானியங்களை யேற்றிக்கொண்டு தங்கள் சுயசாதியோர்களே பல்லக்கைத் துக்கிச்செல்லவும், தங்கள் சுய சாதியோர்களே சூழ்ந்து செல்லவுமாகப் பல யிடங்களுக்குச்சென்று ஜகத்குரு வந்துவிட்டார், சங்க அறர் வந்து விட்டார், சங்கற ஆச்சாரி வந்துவிட்டார், கிராமங்க ளோரும் தட்சனை தாம்பூலங்கள் வரவேண்டு ம், யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள் வரவேண்டுமென்று சொல்லி /T) ஆர்பரிக்குங்கால் அவர்களது பெருங் கூட்டத்தையும் பகரு