பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 Ꮾ க. அயோத்திதாளலப் பண்டிதர் நிருவாணமடைந்து அவரது தேகத்தையும் தகனஞ்செய்து நெடுங் காலமாகி விட்டது. அவரது சங்கறனென்னும் பெயரையும் ஜகத்குருவென்னும் பெயரையும் இவர்கள் சொல்லிக்கொண்டு பொருள் பரித்து வருகின்ருர்கள். இவர்களது பொய்க்குரு வேஷத்தை மெய்யென்று நம்பி மோசம் போகாமல் நீலகண்ட சிவாச்சாரியின் கொள்கைகளையும் அவரது சிலாலயங்களையும் பூசிப்பதே விசேஷமெனக் கூறிவந்தார்கள். திராவிட வேஷப்பிராமணர்களது கூற்றை யறிந்த ஆரிய வேஷப்பிராமணர்கள் சங்கங்களுக்கு அறத்தைப் போதிக்காது ஜனசமுகத்தில் பொருள் பரிப்பவர்களா யிருக்கின்றபடியாலும், சாதியில் பெரிய சாதி யென்னும் பெயரை வைத்துக்கொண்டு தாங்கள் இருக்குமிடங்களை விட்டு வெளி தேசங்களுக்குப் போகாமலிருக்கின்றபடியாலும் தங்களை சங்கறரல்லவென்றும் ஜகத்திற்கே குருவல்லவென்றும் பெரும் பொய்யர்களென்றும் சொல்லி வருகின் ருர்களென் றறிந்துகொண்டு தங்களது பொய்யாய ஜகத்குருவை பல்லக்கிலேற்றி செல்லுங்கால் பெருங் கூட்டங்களும் கனவான்களும் நிறைந்துள்ள விடங்களிலிரக்கி மரத்தடியில் உட்காரவைத்து யானையைப் போல காதையாட்டுங் கஜகரண வித்தையையும், பசுவைப் போல தேகமெங்குந் துடிப்பெழச்செய்யும் கோகரண வித்தையையுஞ் செய்யவிட்டு மக்களை மதிமயக்கி திகைக்கச் செய்து பொருள்பரிப்பது மன்றி அவர் யாரெனில் சிவனே சங்கராச்சாரியாக வந்து பிறந்திருக்கின்ருர் இவரையே நீங்கள் சிவனென்றெண்ணியும் இவரையே ஜகத்குருவென்று பாவித்தும் தட்சணை தாம்பூல மளிப்பீர்களாயின் சகல சம்பத்தும் பெற்று உலகத்தில் வாழ்வது டன் உங்கள் மரணத்திற்குப் பின் சிவனுடன் கலந்துக்கொள்ளு வீர்கள். மற்றப்படி உருதிரட்டும் உத்திராட்சக்கொட்டை யென்னும் பேரிலந்தன் விதையாலும் சாணச் சாம்பலாலும், அறுகோணத்திற்குச் செலுத்தும் தட்சணையாலும், யாதொரு பலனையும் அடையமாட்டீர்களென சொல்லிக்கொண்டே அங்கங்கு சென்று பொருள் பரிக்க வாரம்பித்துக் கொண்டார்கள். சிலபேரிவர்களை யடுத்து அவர்கள் அறுகோணத்தில் சிவனை அர்ச்சிக்கின்ருேமென்கிருர்கள். தாங்களோ சிவனே