பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I I W. சங்கருச்சாரியாக வந்ததாகக் கூறுகின்றீர்கள். உங்களிருவருக் குள்ளும் பேதமுண்டாயக் காரணம் யாதென வினவுவார் களாயின் எங்களுக்குள் சிவனே சங்கறராக வந்துள்ளபடியால் நாங்கள் வேதத்திற்கு மேற்பட்ட வேதாந்திகள் எனக்கூறி திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டி வைத்துள்ள சிலாலயங் களைக் கண்டித்தும் சிலாலயப் பீடங்களைத் தொழுவதில் யாதொரு பயனுமில்லை யென்று கூறியும் அவர்கள் சீவனத்தைக் கெடுத்து வருவதுமன்றி தங்கள் ஜகத்குருவேஷத்தை இன்னும் படாடம்பப்படுத்தி யானை யலங்கிரதம், குதிரை யலங்கிரதம், பல்லக்கலங்கிரதம், குருவலங்கிரத முதலிய சிறப்பால் பேதமெயமைந்த சிற்றரசர்களையும் குடிகளையு மயக்கி ஜகத்குரு வந்தார் சங்கறர் வந்தார் பாதகாணிக்கைக் கொண்டு வாருங் கோளெனப் பொருள் பரித்து பாதையுள்ள தேசங்களை சுற்றிக்கொண்டு முதுகாஞ்சியை யரசாண்டு வந்த இரண்ய காசியபனிடம் வந்து சேர்ந்தார்கள். இரண்ய காசியபனின் ஆளுகைக் குட்பட்டக் குடிகள் யாவரும் இந்திர விழாக் கொண்டாடுவதில் விசேஷ சிரத்தையுடையவர்களும் அத்தேசமெங்கும் சங்கங்களும் நிறைந்து அறமும் பரவியிருந்ததுகொண்டு குரு விசுவாசத்தி லயித்திருந்தவர்களு மாதலின் ஜகத்குரு வந்தார், சங்கறர் வந்தாரென்றவுடன் ஜனகோஷத்தின் படா டம்பத்திற்கு பயந்தும் தங்கள் மெய் குருவின் மீதுள்ள அன்பின் பெருக்கத்தால் பொய்க்குருவின் வேஷத்தை மெய்க்குருவென நம்பி வேண தட்சணைகளும் யானை குதிரை முதலியவைகளுக்கு தீவனங்களு மளித்து அதி சிறப்பு செய்துவந்தார்கள். ஜகத் குரு வந்துள்ளாரென்று கேழ்வியுற்ற வரசன் அவர்களே தனதரண்மனைக்கு அழைத்துவரும்படி யாக்யாபித்தான். அம்மொழியைக்கேட்ட ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு மிக்க வானந்தம் பிறந்து பல்லக்கின் கோஷத்துடன் ஜகத்குரு வருகின்ருர் சங்கறர் வருகின்ருரென்னுங் கூச்சலுடன் அரயன் சமுகஞ் சேர்ந்தார்கள். இவர்கள் படா டம்பத்தைக் கண்ட வரயன் புன்னகைக்கொண்டு அவர்களுக்கு கைகூப்பி சரணுகதி கேளாது நீவிர் யார்காணும் எங்கு வந்தீர்களென்ருன்.