பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 க. அயோத்திதாளலப் பண்டிதர் இரண்யகாசியபன் தங்களைக் கண்டு வணங்காமலும் ஆசனத்தைவிட் டெழாமலும் யார் எங்கு வந்தீர்களென்ற மொழி நாராசங் காச்சி விட்டதுபோ லிருந்தும் காரியத்தின் பேரிற் கண்ணுடையவர்களாதலின் சிவனே சங்கறராகத் தோன்றி யிருக்கின்ருர் அவரை தெரிசிக்கும்படி தங்களிடம் அழைத்து வந்துள்ளோமென்ருர்கள். அவற்றை வினவிய இரண்யகாசியபன் இவ்வேஷப் பிராமணர்களின் மித்திர பேதங்களையும், இவர்களது துற்செயல்களையும் முன்பே யறிந்துள்ளவனதலின் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவரை நோக்கி ஐயா சிவனென்ருல் அவர் யார் அவர் சங்கறராக யெவ்விதமாகப் பிறந்தார் அதை விளக்க வேண்டுமென்று கேட்டான். சிவனென்னும் பெயரும் அத னந்தரார்த்தமும் சங்கற ரென்னும் பெயரும் அதன் தோற்ற காரணமு மறியாதவர்களா தலின் ஏதொரு மாறுத்திரமுங் கூருது குருதட்சணையுண்டா வில்லையாவென் ருர்பரித்தார்கள். அதனை வினவிய அரசன் நந்தனென்னு மரசனை கற்சிதம்பத்தால் சிதம்பித்துக் கொன்றவர் களும், புரூரவனை மண்குழிவெட்டி மாய்த்தவர்களுமாகியக் கூட்டத்தோர் நீங்களல்லோ வென் ருன். அம்மொழியைக் கேட்ட குருவேஷக்கூட்டத்தோர் பின்னுக்கே பல்லக்கைத் திருப்பிக்கொண்டு மாளவ பதிக்குப்போய் சேர்ந்தவர்கள் நீங்கலாக மற்றுமுள்ள சிலர் முதுகாஞ்சியில் தங்கி எவ்வித மாயினும் அரசனை மாய்த்து சுகசீவனந் தேடிக்கொள்ள வேண்டுமென்னும் பேராசையால் பிச்சையேற்று தின்றுக் கொண்டே அரண்மனையிலுள்ளவர்களை வசப்படுத்திக் கொண்டு அரசபுத்திரன் பிரபவகாதனை நேசிக்கவும் தங்கள் சொற்படி கேட்கவுமான சில தந்திரோபாயங்களைச் செய்து கொண்டு அப்பா நீர் அறப் பள்ளிக்குச் செல்லும் போதும், அரண்மனையி லிருக்கும்போதும் நாராயண நம நாராயண நம வென்று சொல்லிக்கொண்டே யிருப்பாயா யின் ன் தகப்பனும் மற்றுமுள்ளோரும் அஃதென்னையென்று கேட்பார்கள். அவர்தான் எங்களுடைய தேவன், அவர்தான் எல்லோரையுங் கார்ப்பவ ரென்று கூறுவையாயின் அரசனும் மற்றுமுள்ளோரும் சந்தோஷப்பட்டு உன்னை மெச்சிக் கொள்ளு