பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I 19 வார்களென உற்சாகப்படுத்தி விட்டார்கள். பிரபவகாதனும் யாதொன்றுமறியா சிறியதைலின் அம்மொழியை மெய்யென நம்பி அரண்மனையில் விளையாடும் வேளையிலும், அறப்பள்ளியில் கல்வி கற்கும் வேளையிலும், சயனிக்கும் வேளையிலும், நாராயணு நமா நாராயணு நமா வென்னு மொழியையே வோர் விளையாட்டாக வுச்சரித்திருந்தான். அம்மொழியை அறப் பள்ளியில் வசிக்கும் சமண முநிவர்களறிந்து பிரபவகாதனே அருகிலழைத்து அப்பா நீரென்ன சொல்லுகிறீ ரென்ருர்கள். அவன் யாதொன்றும் வேறு மறுமொழி கூருது நாராயண நம, நாராயணநமவென சொல்லிக்கொண்டே ஒடி விட்டான். அறியா சிறுவனும் அரசபுத்திரனு மாதலின் அவனை ஒன்றுங் கவனிக்காமல் மகடபாஷையில் (நாரோவா) நாரோயண் யோ வென்னு மொழிக்கு நீர் என்னும் பொருளுள்ளபடியால் நீரே நமவென்று சிறுவன் கூறுமொழி யாதும் விளங்கவில்லை. அதையே ஒர் விளையாட்டாக சொல்லித் திரிகின்ருன். கேட்கினும் மறுமொழி கூறுவதைக் காணுேம். அம்மொழி விளையாட்டே அவன் சட்ட மெழுதுவதையும், பாட்டோலையையுங் கெடுத்து வருகின்றது. அரசன் கேட்பாராயின் ஆயாசமடைவார். ஒலைச்சுருள் விடுக்கவேண்டுமென்று பேசிக்கொண்டார்கள். இச்சங்கதிகள் யாவையுமறிந்த வாரிய வேஷப்பிரா ம்மெ யாவர் கேட்கினும் மணர்கள் பிரபவகாதனை யழைத்து உ பதில் கூறவேண்டாம் அரசன் கேழ்ப்பாரேயானல் நாராயணன்தான் சகலரையுங் காப்பவர் ஆதலால் நாராயண நமவென்று சொல்லுகிறேனெனத் திடம்படக் கூறுவீராயின், உமது தந்தையும் மற்றுமுள்ளோரும் ஆனந்திப்பதுடன் உமது விவேகத்தைப்பற்றியும் மிக்கக் கொண்டாடுவார்கள். அங்ஙனமவர்கள் ஆனந்தங்கொள்ளாது சீற்றமுடையவர் களாகி நாராயணனென்ருலென்ன, அவனெங்கிருக்கின்ருன், அவனெத்தேசத்தான், என்னிறத்தான், என்ன பாடையானென விசாரிப்பார்களாயின் அவற்றை மாலை அந்தி நேரத்திற் காண்பிக்கின்றேன் தந்தையாகிய நீவிர்தவிர மற்றவர் யாரு மிங்கிருக்கப்படாதென்று தெரிவித்து அவ்விடம் நடந்த வர்த்தமானங்களை யெங்களுக்கு மறிவித்து விடு வீராயின்