பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 3 1 கேழ்க்குங்கால் மனிதரூபமாக ஒர் சிம்மம் வந்து கொன்றுவிட்ட தென்று கண்டவர்கள் கூச்சலிட்டலற பிரபவகாதனுமவ்வகை சொல்ல வாரம்பித்தான். அவற்றைக்கேட்ட விவேகிகள் மனிதனைப்போன்ற சிம்மமும் உலகத்தி லுண்டோவென விசாரித்ததுடன் பிரபவகாதனையும் சரிவர விசாரிக்க வாரம்பித்தார்கள். பிதாயிறந்தபின் ஆரிய வேஷப்பிராமணர்களால் நடந்துவந்த சங்கதிகள் யாவற்றையும் சொல்லும்படி யாரம்பித்ததின் பேரில் மந்திரிப் பிரதானிகளுக்கும், சமண முநிவர்களுக்கும் சந்தேகந்தோன்றி அவ்விடம் வந்து குடியேறியுள்ள ஆரிய வேஷப்பிராமணர்கள் யாவரையுந் தருவித்து வஞ்சினத்தால் அரசனைக் கொன்றவர்கள் யாரென விசாரித்தார்கள். அவற்றை வினவிய ஆரியர்கள் தாங்களும் அரசனது மரணத்திற்காகத் துக்கிப்பதுபோல் மிக்கத் துக்கித்து நாங்களில் விடம் வந்தபோது சில பெரியோர்கள் நாராயணனும், நாரசிம்மனும் ஒன்றேயென்று சிந்தித்துக்கொண்டதுமன்றி எங்களையும் சிந்திக்கும்படி செய்து விட்டு ப் போர்ைகள். அவ்வகையில் யாங்கள் சிந்தித்திருக்கும்போது அரசபுத்திரனும் அவ்விடம் வருவதுண்டு. யாங்களு மவற்றை சொல்லும்படி செய்வதுண்டு. அரசனுக்கு ஏதோ குலதெய்வ தோஷத்தால் இத்தகைய மரணம் நேரிட்டிருக்குமேயன்றி மற்ருெருவராலும் நேர்ந்திருக்க மாட்டாதென்று கூறியவுடன் சமணமுநிவர்கள் பகவனது சகஸ்திர நாமங்களை யாராய்ந்து அசோதரை யாம் மலையரசன் புத்திரி பகவனை நாரசிம்மமென்றழைத்த ஒர் பெயருண்டு. ஆயினும் அகிம்சா தன்மத்தை போதித்த அறவாழியான் இத்தகையச்செயலைச் செய்வரோ ஒருக்காலுஞ் செய்யமாட்டார். இவைகள், யாவும் ஆரிய வேஷப்பிராமணர் களின் மித்திரபேதமே யென்று முடிவு செய்தார்கள். அத்தகைய முடிவிற்குப் பகரமாய் வேவுகரில் ஒருவனேடி வந்து சமணமுநிவரை வணங்கி தேவரீர் இதோ நிற்குங் கூட்டத்தோரிலொருவன் மாலையில் வந்து அரசனிடம் போகவேண்டுமென்று கேட்டான். நான் வெளியிற்போகும் சமயமானபடியால் போகலாமென்று சொல்லிவிட்டுப்போகும் போது அவன் அக்குளில் யேதோ ஒர் மூட்டையுள்ளதைக்